சென்னை: அமைச்சராக பதவியேற்ற திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி, ''இனிமேல் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் எனவும், மாமன்னன் படம் தான் தனது கடைசிப்படம்'', எனக்கூறியுள்ளார்.
'ரெட் ஜெயண்ட்' மூவிஸ் மூலம் பட விநியோகம் மற்றும் தயாரிப்பில் ஈடுபட்டதுடன் நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார். அவரை அமைச்சராக்க வேண்டும் என குடும்பத்தினர் மற்றும் திமுக.,வினர் வலியுறுத்தி வந்தனர். பல மாவட்டங்களில் திமுக.,வினர் தீர்மானம் நிறைவேற்றினர். இருப்பினும் அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வந்த நிலையில் இன்று (டிச.,14) உதயநிதி அமைச்சராக பதவியேற்று கொண்டார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அமைச்சராக பதவியேற்று கொண்ட பின்னர் உதயநிதி அளித்த பேட்டி: வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். திமுக இளைஞரணி செயலாளராகவும், எம்எல்ஏ.,ஆகவும் பதவியேற்ற போது வாரிசு அரசியல் என விமர்சனம் வந்தது. விமர்சனங்கள் வந்து தான் ஆகும். அதற்கு எனது செயல்பாடுகள் மூலமாக தான் பதில் கொடுக்க முடியும்.
குறைகள் இருந்தால் சொல்லுங்கள். அதனை சரி செய்வோம். துறை செயலாளர் உள்ளிட்ட அனைவரின் ஒத்துழைப்புடன் முடிந்தளவுக்கு எனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை முடிந்தளவு சிறப்பாக செயல்படுவேன். தமிழகத்தை விளையாட்டு தலைநகரமாக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்படும்.
இனி திரைப்படங்களில் நடிக்க மாட்டேன். '' மாமன்னன்'' திரைப்படமே எனது கடைசிப் படமாக இருக்கும். இவ்வாறு உதயநிதி கூறினார்.
வாசகர் கருத்து (122)
விளையாட்டு துறை அமைச்சர் விளையாட்டு பிள்ளை ஆக இல்லாமல் பொறுப்பாக நடந்து கொள்வாரா
குருதிச் மன்னராக முடி சூட உடனடியாய் அடுத்த வாரிசை களமிரக்குவீர்கள் என்று உபிக்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள் அதற்கான ஏற்பாட்டை உடனடியாக தொடங்கவும் ஜஙாங்கீர் ஷாஜஙான் போன்ற நிகழ்வு ஏற்படாமல் இருந்தால் சரி
//நடிப்புக்கு முழுக்கு// ....அய்யய்யோ அப்போ ஆஸ்கார் விருது இவர் இல்லாவிட்டால் யாருக்கு கொடுப்பார்கள் ....ஆஸ்கார் தேர்வு குழுவுக்கு மிகவும் கஷ்டம் ....யாரை தேர்ந்தெடுப்பது என்பதில் மிகவும் சிரமப்படுவார்கள் !!!
யாரை யார்கூட compare பண்றீங்க வேணுகோபால் ? நன்றாக படித்து, பட்டம் பெற்று, தேர்வின் அடிப்படையில் தகுதி உள்ளதால் மட்டுமே IPS அதிகாரியாகி அதுவும் நம் அண்டை மாநிலத்தில் கர்நாடகாவில் நேர்மையால், சிங்கம் என்று பெயர் வாங்கியவர், அந்த அனமலையோடு, உழைப்புனா எண்ணனே தெரியாத ஒரு நபரோடு (GAYBOY) COMPARE பண்றீங்க? நீங்க கடைசிவரை போஸ்டர் ஓட்ட தயாரா இருக்கீங்கன்னு தெரியுது.... தரவிடமாடளுக்கு முட்டுக்கொடுங்க... கொடுத்துகிட்டே இருங்க... விளங்கிடும்
ஆஸ்கார் கமிட்டீயில் இருந்து உன்னை கூப்பிட்டு "நீ நடிக்காமல் மட்டும் இருக்காதே" என்று சொல்லவில்லையா? நாளைக்கு யாராவது அவார்டு கொடுத்தார்களா என்று கேட்டால் எப்படி உருட்டுவது? தாடிக்காரனுக்கு யுனெஸ்கோ விருது கொடுத்தார்கள் என்று ஒரு உருட்டு போல... எப்படி சொல்வாய்? இந்த பகுதியில் நடராஜ ஐயர் என்று ஒருவர் எல்லோரது கருத்துக்களுக்கும் கமெண்ட் அடிக்கிறார்..... யார் அவர்? பசுத்தோல் போர்த்திய புலி போல் தெரிகிறது......