ADVERTISEMENT
கடந்த 10ம் தேதியிட்ட நம் நாளிதழில், 'உரத்தக் குரல்' பகுதியில், 'அறிவாளனுக்கு கும்மி அடிக்கிறது யாரு?' என்ற தலைப்பில் கட்டுரை வெளியானது. டில்லியில் உள்ள தேசிய சட்ட பல்கலையின் வருடாந்திர விரிவுரை நிகழ்ச்சியில், 'மறுக்கப்பட்ட நீதியும் முடிவுறாத தேடலும்' என்ற தலைப்பில், ராஜிவ் கொலையாளிகளில் ஒருவரான பேரறிவாளன் விரிவுரை ஆற்ற போகும் தகவல் கட்டுரையில் இருந்தது.
'இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு தேர்வு செய்யப்பட்ட இடம், ஒரு ஆங்கில நாளிதழ் ஆதரவில் உருவாகி, சென்னையில் செயல்படும் இதழியல் கல்லுாரி' என்றும் சொல்லப்பட்டு இருந்தது.
கட்டுரை வெளியான பின், சென்னை தரமணியில் உள்ள, 'ஏசியன் காலேஜ் ஆப் ஜர்னலிசம்' கல்லுாரியின் தலைவர் சசிகுமார் கூறியதாவது:

குறிப்பிட்ட நிகழ்ச்சி தொடர்பான துண்டு பிரசுரங்களில், டில்லி சட்ட பல்கலையும், எங்கள் கல்லுாரியும் இணைந்து நிகழ்ச்சியை நடத்துவது போல அச்சிடப்பட்டிருந்தது.
இது எதுவுமே எங்களுக்கு தெரியாது. அதோடு நிகழ்ச்சிக்கும், எங்களுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.
இருந்தபோதும், சமூக வலைதளங்களில், நிகழ்ச்சிக்கு எதிரான கருத்துக்கள் பதிவிடப்பட்டன. அரசியல் ரீதியிலும் எதிர்ப்புகள் வந்தன.
இதனால், அதிர்ச்சி அடைந்தோம். உடனே, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை அழைத்து, அரங்கம் ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டோம். அதனால், வரும் 17ல் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி, எங்கள் கல்லுாரி வளாகத்தில் நடக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையில், இவ்வளவு எதிர்ப்புக்களையும் மீறி, ஏற்கனவே அறிவித்தபடி, அதே நாள்; அதே நேரத்தில், 'ஆன்லைனில்' அந்த நிகழ்ச்சியை நடத்தப் போவதாக, தேசிய சட்ட பல்கலை அறிவித்துள்ளது.
வாசகர் கருத்து (29)
அந்த மதமாற்றிகள் கூட்டத்தைய சேர்த்தவர் அதனால் முக்கியத்துவம் கொடுக்க பட்டது . ஆராய்ச்சி செய்யலாம் தமிழ்நாட்டில் எங்கு எங்கு தடையில்லாமல் வேட்டு வைக்கலாமென்று ....
இது சொல்லுது பணமே எல்லாம் என்று.
இன்றைய இளையசமுதாயமே இவன் இந்த மன்னிலிருக்காத அளவிற்கு நிராகரியுங்கள்.அவன் தன் நடவடிக்கையால்....
ஏவ்வளவு பெரிய தியாகத்தை செய்த இந்த தியாகியின் நிகழ்ச்சி ரத்தானது பெரும் துயரமே ..
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
அந்த முடியாத தனத்திற்கு யாரையாவது திட்ட வேண்டுமே யார் சும்மா இருப்பார்கள்