விளக்கம்
அருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டார் பகுதியில் சீன வீரர்களுடன் நடந்த மோதல் தொடர்பாக லோக்சபாவில் ராஜ்நாத் சிங் அளித்த விளக்கம்: கடந்த 9 ம் தேதி தவாங் செக்டாரில் உள்ள யங்ஸ்டே பகுதியை சீன வீரர்கள் ஆக்கிரமித்து அங்கு மாற்றத்தை ஏற்படுத்த முயன்றனர். இதனை இந்திய வீரர்கள் உறுதியான முறையில் சமாளித்தனர். நமது வீரர்கள், தைரியமாக சீன வீரர்களை எதிர்கொண்டு, அவர்களை தடுத்து நிறுத்தி, அவர்களின் முகாம்களுக்கு திருப்பி அனுப்பினர்.
வீரர்கள் தயார்
இந்த விவகாரம் ராஜதந்திர வழிகள் மூலமாக சீன அரசிடம் எடுத்து செல்லப்பட்டுள்ளது. நமது எல்லைகளை பாதுகாக்க, நமது படைகள் உறுதிபூண்டுள்ளன. அதற்கு சவாலாக மேற்கொள்ளப்படும் எந்த முயற்சியையும் முறியடிக்க நமது வீரர்கள் தயாராக உள்ளனர் என்பதை இந்த அவைக்கு உறுதியாக தெரிவித்து கொள்கிறேன்.
தலையீடு
இந்த மோதலில் இரு தரப்பிலும் சில ராணுவ வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. நமது வீரர்கள் யாரும் உயிரிழக்கவில்லை. படுகாயமும் அடையவில்லை என்பதை உறுதியுடன் தெரிவித்து கொள்கிறேன். இந்திய ராணுவ கமாண்டர்கள் உரிய நேரத்தில் தலையிட்டதால், சீன வீரர்கள் அவர்களின் முகாமிற்கு வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பப்பட்டனர்.
மறுப்பு
வெளிநடப்பு
முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என பார்லிமென்டின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டன. இதனால், பார்லிமென்ட் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதன் பிறகு, ராஜ்நாத் சிங் லோக்சபாவில் அறிக்கை தாக்கல் செய்தார். பிறகு, இந்திய சீன வீரர்கள் தொடர்பாக வெறும் அறிக்கை மட்டும் போதாது. விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்திய எதிர்க்கட்சியினர். லோக்சபாவில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
வாசகர் கருத்து (6)
இத்தாலி காங்கிரஸ் ஜந்துக்கள் மிகவும் ஆனந்தப்படுவர்.....இவனுங்க காட்டியும் கொடுப்பானுங்க,..
சீனாவின் உளவாளிகள் காங்கிரஸ் என்கிற பெயரில் நிறைய பேர் பெரும் செல்வந்தர்களாக இருகின்றனர்
இதை வெச்சு அரசியல் கண்டிப்பா நடக்கும். இந்தியாவுக்குள் பாதுகாப்பா நடந்து அரசியல் செய்பவர்கள்,
பேச்சுவார்த்தைகள் என்னாச்சு