அதேபோல் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான பெய்யக்கூடும். அடுத்த 5 நாட்களுக்கு தமிகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரூ இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பள்ளி விடுமுறை நிலவரம்:
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம், நெமிலி தாலுகாக்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் கனமழை காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று மதியத்திற்கு மேல் அரை நாள் விடுமுறை விடப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று மதியம் மற்றும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தின் புயல் தாக்கத்தினால், இப்பொழுது பெங்களூருவில் இடியுடன் கூடிய மழை.