Load Image
Advertisement

குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் பதவியேற்பு: பா.ஜ., தொண்டர்கள் உற்சாகம்


ஆமதாபாத்: குஜராத் சட்டசபை தேர்தலில், பா.ஜ., அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து, தற்போதைய முதல்வர் பூபேந்திர படேல் மீண்டும் முதல்வராக இன்று (டிச.,12) பதவியேற்றார்.

Latest Tamil News


குஜராத் சட்டசபையில் மொத்தமுள்ள 182 தொகுதிகளுக்கு சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில், 156 தொகுதிகளில் வெற்றி பெற்று பா.ஜ., சாதனை படைத்தது. 1995 முதல் 27 ஆண்டுகளாக குஜராத்தில் பா.ஜ., ஆட்சியை தக்கவைத்து வந்துள்ளது.
தற்போதைய வெற்றியின் வாயிலாக, ஏழாவது முறையாக மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.

Latest Tamil News

'தற்போதைய முதல்வர் பூபேந்திர படேல் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்பார்' என, தேர்தலுக்கு முன் பா.ஜ., தலைமை அறிவித்தது. தேர்தலில் வெற்றி உறுதியான பின், இதை மாநில பா.ஜ., தலைவர் மீண்டும் உறுதி செய்தார்.

Latest Tamil News

இந்நிலையில் குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் இன்று(டிச.,12) பதவியேற்றார். இதையடுத்து கவர்னர் ஆச்சார்யா தேவ்ரத்திடம் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இவர் இரண்டாவது முறையாக குஜராத் முதல்வர் பதவியை பிடித்துள்ளார்.

இவர் குஜராத்தின் 18 வது முதல்வர் ஆவார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


வாசகர் கருத்து (4)

  • வீரா -

    பிஜேபியின் பிரச்சார பீரங்கி ராகுலை ஏன் அழைக்கவில்லை? அவர் மட்டும் சாவர்க்கர் பற்றி பேசி பிஜேபியையும் மற்ற ஹிந்துக்களையும் வெறுப்பேற்றாமல் இருந்திருந்தால் மக்கள் காங்கிரசை இவ்வளவு மோசமாக குஜராத்தில் தோற்கடித்திருக்க மாட்டார்கள்.

  • kulandai kannan -

    ஓ.பி.எஸ் எங்கே??

  • hidayadullah - bangalore,இந்தியா

    நல்லது

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்