தமிழக பா.ஜ., மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், சென்னை கமலாலயத்தில் சமீபத்தில் நடந்தது. அதில், 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
பச்சைக் கொடி
கூட்டத்தில், அண்ணாமலை பேசியது குறித்து, கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
தனித்து போட்டியிடும் அளவுக்கு, நாம் வளர்ந்தாக வேண்டும்.
திராவிட இயக்கங்களில் இருப்பவர்களே அஞ்சி, வெட்கப்படும் அளவிற்கு பாலியல் குற்றச்சாட்டுக்கள், நம்மோடு இருப்பவர்கள் மீது பரபரப்பாக எழுகிறது. ஒழுக்கக் கேடானவர்களுக்கு, பா.ஜ.,வில் இடமில்லை.
கட்சியில் இருக்கும் ஒவ்வொருவரும் என்ன செய்கின்றனர் என்பது, எனக்கு தெரியும். போலீஸ் அதிகாரியாக இருந்த போது, 'இன்டலிஜென்ஸ்' பிரிவிலும் அதிகாரியாக பணியாற்றி உள்ளேன்.
கட்சிக்கு எதிராகவும், எனக்கு எதிராகவும், 'டுவிட்' போடும் பெண்மணி, துபாய்க்கு எதற்கு போனார்; எங்கு தங்கினார்; எந்த தி.மு.க.,காரரை சந்தித்தார் என்பதெல்லாம் எனக்குத் தெரியும்; ஆதாரமும் உள்ளது.
நம் மாவட்ட தலைவர்கள் பலர், ஆங்காங்கே தி.மு.க.,வினருடன் கொஞ்சிக் குலாவுகின்றனர். குடும்பத்தோடு, அவர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளுக்கு செல்கின்றனர்; போட்டோவுக்கு போஸ் கொடுக்கின்றனர்.
தாங்கள் செய்யும் ரியல் எஸ்டேட் தொழிலுக்கு, 'அப்ரூவல்' கேட்டு, தி.மு.க.,வினரிடம் செல்கின்றனர். தொழில் தான் முக்கியம் என்றால், அப்படிப்பட்டவர்கள் கட்சிக்கு தேவையில்லை.
மாவட்ட நிர்வாகி ஆகி விட்டோம்; மூன்று ஆண்டுகளுக்கு யாரும் ஒன்றும் செய்ய முடியாது என நினைத்து, கட்சி பணியாற்றாமல் உள்ளனர்.
ஏற்கனவே, ஏழு மாவட்ட நிர்வாகங்கள் கலைக்கப்பட்டு உள்ளன; 15 மாவட்ட தலைவர்கள் மாற்றப்பட்டு உள்ளனர். இதையெல்லாம் மனதில் கொள்ள வேண்டும்.
தி.மு.க.,தான் நமக்கு எப்போதும் பிரதான எதிரி. அதனால், யாரும் அவர்களோடு எவ்வித தொடர்பிலும் இருக்கக் கூடாது.
3 விஷயங்கள்
தி.மு.க.,காரங்க வீட்டு கல்யாணத்துக்கும் போகக் கூடாது. மீறி போனால், அவர்களுக்கு கட்சியில் இடமில்லை. கடைசியாக, மூன்று விஷயங்களை குறிப்பிட விரும்புகிறேன்...
கட்சியில் ஒருவரை சேர்க்க பரிந்துரை வந்தது. விசாரித்ததில், அவர் ரவுடி என தெரிந்தது. 'யோசித்து சேர்க்கலாம்; அவசரம் இல்லை' என, கூறி விட்டேன். அதை மீறி, அந்த நபரை கட்சியில் சேர்த்துள்ளனர். அந்த நபர் வீட்டில் விருந்து சாப்பிட்ட பின், இது நடந்திருக்கிறது
ஒருவர் சந்தன கட்டை மற்றும் செம்மரம் கடத்தலில் ஈடுபட்டுள்ளார். 50ம் அதிகமான வழக்குகள் உள்ளன. அவரையும் கட்சியில் சேர்த்துள்ளனர்
பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நேரம்... சென்னையில் இருக்கும் கட்சிக்காரர் ஒருவர், விரோதமாக செயல்பட்டு, 5 கோடி ரூபாய்க்கான மதிப்பிழந்த பணத்தை, கமிஷனுக்கு மாற்றி கொடுத்துள்ளார்.
கமலாலயம் வரை போலீஸ் விசாரணை நீண்டது. இப்படிப்பட்ட ஆட்களுக்கு எல்லாம் இனி கட்சியில் இடம் கிடையாது.
இவ்வாறு அண்ணாமலை பேசியதாக பா.ஜ., மூத்த நிர்வாகி கூறினார்.
- நமது நிருபர் -
வாசகர் கருத்து (23)
இந்த போர்டுக்கு பதிலா "மாற்று கட்சியில் பொறுப்பில்(எந்த பொறுப்பாயிந்தாலும்)இருந்து இங்கு வருபவர்களுக்கு மூன்று வருடங்களுக்குப் பிறகே அவர்களின் உழைப்பின் அடிப்படையில் பொறுப்பு வழங்கப்படும்" ன்னு ஒரு போர்டை மாட்டிப்பாருங்க, sleeper cell-ங்க எல்லாம் "துண்டக்காணும் துணியக்காணும்"னு ஓடிப்போயிரும்
ஒழுக்கக்கேடானவர்கள் கட்சிக்கு வேண்டாம் என்று சொல்லவே ஒரு தைரியம் வேண்டும். அது பிஜேபிக்கட்சிக்கும் இருக்கிறது, அண்ணாமலை அவர்களுக்கும் இருக்கிறது. இதற்காகவே இவர்கள் கையில் ஆட்சியை கொடுக்கலாம்.
No kurugiya manapanmai Mr. Ramesh, if party has to grow , strict disciplinary action is the need of the hour, which Annamalai is doing. Really, hats off to him.
வெளிப்படையான அறிவிப்பு. வேறு எந்த தலைவருக்கும் இந்த துணிச்சல் வராது. பாராட்டுக்கள். இப்பொழுது பணபலமும் ஆள்பலமும் இருந்தால் கட்சியில் சேர்த்துக்கொள்கிறார்கள். நிலைமை மாறவேண்டும்.
நல்லா யோசித்து சொல்லுங்கள் அண்ணாமலை அவர்களே, அப்புறம் தமிழக பாஜகவில் நீங்கள் மட்டுமே தனியாக இருப்பீர்கள், பரவாயில்லையா?