Load Image
Advertisement

அய்யனார் கோவிலுக்கு செல்ல நிலம் வழங்கிய இஸ்லாமியர்

  அய்யனார் கோவிலுக்கு செல்ல நிலம் வழங்கிய இஸ்லாமியர்
ADVERTISEMENT


கீழக்கரை: மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக, அய்யனார் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல பாதை வழங்கிய தினமலர் நாளிதழின், 60 ஆண்டு கால வாசகரை, அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை கிழக்கு தெருவைச் சேர்ந்த விவசாயி முகம்மது சுஐபு, 75. இவர் இரண்டு மாதங்களுக்கு முன், காஞ்சிரங்குடி மேலவலசை கிராமத்தில் உள்ள பொன்னு சிறையெடுத்த அய்யனார் கோவிலுக்கு செல்லும் பிரதான பாதைக்காக, தன் நன்செய் நிலத்தில், 8 சென்ட் இடத்தை தானமாக வழங்கினார்.இதே போல, காஞ்சிரங்குடி, பக்கீரப்பா தர்காவில் இருந்து கடற்கரை ஓரமாக கிழக்கு முத்தரையர் நகர் செல்லும் தார் சாலைக்காக, தன்னுடைய புன்செய் நிலத்தில் இருந்து, 15 சென்ட் நிலத்தை தானமாக வழங்கி உள்ளார்.தற்போது அந்த சாலையில் கீழக்கரையில் இருந்து முத்தரையர் நகர் வரை டவுன் பஸ் இயக்கப்படுகிறது.

ஹிந்து கோவில் மற்றும் பொதுமக்களின் பொது பாதைக்காக தன் நிலத்தை தானமாக வழங்கிய இவரின் செயல் அப்பகுதி மக்களால் பாராட்டப்படுகிறது.முகம்மது சுஐபு கூறியதாவது:

கோவில் பாதைக்காக என் நிலத்தை தானமாக வழங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. இதனால், நாள் தோறும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு சென்று வணங்கி வருகின்றனர்.நான், 60 ஆண்டுகளாக தினமலரின் தீவிர வாசகராக உள்ளேன். தினமலர் நாளிதழின் செய்திகளை அன்றாடம் படிப்பது என் வாடிக்கை. சமூக நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக நாம் ஒவ்வொருவரும் விளங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து (8)

  • Yesappa - Bangalore,இந்தியா

    அரசு தருவது வேறு, தனி மனிதன் தருவது வேறு...இவர் தரவில்லை என்றாலும் யாரும் கேட்கப்போவதில்லை .. தயவு செய்து குறை சொல்ல வேண்டாம்

  • Nava - Thanjavur,இந்தியா

    மண்ணின் மைந்தர்களின் நிலத்தை இலவசமாக கொடுத்து விட்டார் என்று புள ங்காகிதம் அடைவதை தவிர வேறு வழியில்லை

  • Prabhakaran Rajan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    GREATE SIR

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    விவசாயம் செய்ய ஆரம்பித்தவுடன் கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் வந்துவிடுகிறது. அருமை. வாழ்த்துகள் பாய்.

  • அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா

    ? கோவில் எப்போது கட்டப்பட்டது? இத்தனை நாட்கள் ஹிந்துக்கள் எந்த வழியாக சென்று கொண்டு இருந்தார்கள்? ஆர்க்காடு நவாபு இந்துக்களிடம் கொள்ளையடித்த பூமியிலிருந்து துளி கோவிலுக்கு விட்டுக்கொடுத்து விட்டு இன்று வரை சொல்லிக்காட்டிக்கொண்டு இருக்கிறான்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement