கடந்த 2019 லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 3.7 சதவீதம் ஓட்டுக்கள் கிடைத்தன. அதை விட ௭ லட்சம் ஓட்டுக்கள் குறைவாக 2021 சட்டசபை தேர்தலில் அக்கட்சி பெற்றது.

இது தொடர்பாக ம.நீ.ம. மாநில நிர்வாகிகள் சிவ.இளங்கோ மவுரியா ஆகியோர் தலைமையிலான குழுவினர் தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் சென்று கூட்டணி திட்டம் தொடர்பாக கட்சியினரிடம் கருத்து கேட்டனர்.
அதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் இறுதி முடிவெடுக்க கட்சியின் உயர் மட்டக் குழுவாக கருத்தப்படுகிற செயற்குழுக் கூட்டத்தை கூட்ட கமல் திட்டமிட்டுள்ளார். டிச. 15ம் தேதி அல்லது இம்மாத இறுதிக்குள் செயற்குழு கூட உள்ளது. அதில் இடம்பெற்றுள்ள 29 பேரிடம் கருத்து கேட்க கமல் முடிவுசெய்துள்ளார்.
மேலும் பொங்கல் விடுமுறையில் மதுரை பழங்காநத்தத்தில் பொதுக்கூட்டம் நடத்துவது குறித்தும் பிப். 21ல் கட்சியின் ஐந்தாம் ஆண்டு துவக்க விழாவை ஒட்டி சென்னையில் மாநாடு நடத்துவது குறித்தும் செயற்குழுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- நமது நிருபர் -
வாசகர் கருத்து (18)
சென்ற தேர்தலில் கூட்டணிக்கு வெளியே இருந்து பெட்டி வாங்கினார் இந்த முறை கூட்டணிக்குள் இருந்து பெட்டி கேட்கப்போகிறார். அவ்வளவுதான் வித்யாசம். திமுகவின் B டீம் இந்த முறை திமுகவின் இன்னொரு அணி.
சீமானுக்கோ டிடிவி.தினகரனுக்கோ, கமல்ஹாசனுக்கோ இஸ்லாமியர்கள், கிருஸ்தவர்கள் யாரும் வாக்களிக்கவில்லை. அவர்கள் வாங்கிய வாக்குகள் அனைத்தும் ஹிந்துக்களின் வாக்குகள்தான். பெரும்பகுதி ஹிந்துக்களின் வாக்குகள் சென்ற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணிக்கு விழுந்தது. அந்த வாக்குகள் எளிதில் மாறாது. வரும் பாராளுமன்ற் சட்டமன்ற தேர்தல்களில் இன்னும் அதிகளவில் ஹிந்து வாக்குகள் ஒருங்கிணைக்கப்பட்டு அதிமுக பாஜக கூட்டணிக்கு பெரியளவில் போகும். அந்த வாக்குகளை சேதப்படுத்ததி திமுகவுக்கு வெற்றியை கொடுப்பதற்காகத்தான் கமல்ஹாசன், டிடிவி.தினகரன், சீமான் கும்பல்கள் எல்லாம். ஹிந்துக்கள் விழித்துக்கொள்ளவேண்டும். ஒரு முறை ஒரே முறை ஹிந்துக்கள் மைனாரிட்டி வாக்குகளை வைத்து பிழைப்பு நடத்தும் பெரிய கட்சிகளை அவர்கள் வீசும் எலும்புத்துண்டுக்கு வாலாட்டும் அல்லக்கை கட்சிகளை புறக்கணித்தால் அந்த நிமிடமே தமிழ்நாட்டில் மைனாரிட்டி வாக்கு வாங்கி என்ற அரசியல் அயோக்கியத்தனம் முடிவுக்கு வந்துவிடும்.
நமக்கே நாலுபேருதான் . கூட்டணி வேண்டுமா பணம் சிலவுசெய் என்று திமுகவிடம் கேட்டு பணம் பண்ணலாம் . வேறு எந்த பயநும் இல்லை . திமுகவுடன் கூட்டணி வைத்த கம்யூனிஸ்ட்டே பணம் வாங்கும்போது நீங்களும் கேட்டு வாங்கி உங்கள் வாழ்க்கையை வளப்படுத்தலாம் .
இனி நம்ம கட்சி பூட்டகேஸ் என்று தெரிந்தும் கூட ....
இரண்டு ஊழல் கட்சிகளுக்கு மாற்றாக ஆரம்பித்து ஊழல் கட்சிகளிடம் சரண் அடைவதுதான் புதுக்கட்சிகள். பாமக மதிமுக தேதிமுக வரிசையில் மநீம