Load Image
Advertisement

நாட்டின் வளர்ச்சிக்கு புதிய கல்விக்கொள்கை தேவை: கவர்னர் ரவி

 நாட்டின் வளர்ச்சிக்கு புதிய கல்விக்கொள்கை தேவை: கவர்னர் ரவி
ADVERTISEMENT
கோவை: 'நம் நாடு, பொருளாதார,பண்பாடு, ஆன்மிக ரீதியாக முன்னேற, தேசிய புதிய கல்விக்கொள்கை உறுதுணையாக இருக்கும்,'' என, கவர்னர் ரவி, பல்கலை விழாவில் காணொளி வாயிலாக பேசினார்.

அவினாசிலிங்கம் பல்கலையில், இந்திய பல்கலை கூட்டமைப்பு ஆதரவுடன் கல்வி மற்றும் நிர்வாக மேம்பாட்டு மையம் துவக்க விழா, நேற்று பல்கலை அரங்கில் நடந்தது.

இதில், கவர்னர் ரவி காணொளி வாயிலாக பங்கேற்று பேசியதாவது: கல்விமுறை என்பது, சமூகம், நாட்டின் வளர்ச்சியை மையமாக கொண்டு இருக்க வேண்டும். தற்போது, நாம் பின்பற்றும் கல்விமுறை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் விட்டுச் சென்றவையே. 60 மற்றும் 80ம் ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட, புதியகல்விக்கொள்கையும் அதை தழுவியே இருந்தது.

தற்போது கொண்டு வரப்பட்டுள்ள புதிய தேசிய கல்விக்கொள்கை, கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என, அனைத்து தரப்பினரின் முயற்சியில், நாட்டின் எதிர்காலத்தை மையமாக கொண்டு சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Latest Tamil News
இதை, பெரும்பாலானோர் ஏற்றுள்ள போதும், ஒரு சிலர் ஏற்கவில்லை. விரைவில் அனைவரும் ஏற்றுக்கொள்வர்; ஏனெனில் இக்கொள்கை, தனிப்பட்ட கட்சியோ, பிற ஆன்மிகம் சார்ந்தோ வடிவமைக்கப்படவில்லை.

நம்நாடு பொருளாதார, பண்பாடு, ஆன்மிக ரீதியாக முன்னேற உறுதுணையாக இருக்கும். விவேகானந்தர் கனவுகண்ட புதிய பாரதத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப ரீதியாக பல்வேறு மாற்றங்களையும், வளர்ச்சிகளையும் சந்தித்துள்ளோம்.

இந்நிலையில், மாணவர்கள், பொதுமக்கள் கட்டாயம் தொழில்நுட்ப அறிவாற்றலுடன் இருப்பது அவசியம். புதிய பாரதம் வடிவமைப்பதில், ஆசிரியர்களின் பங்களிப்பு மகத்துவமானது. நவீன கற்றல், கற்பித்தல் முறைக்கு தங்களை மேம்படுத்தி கொள்ள வேண்டும்.

தேசிய புதிய கல்விக்கொள்கையின் படி, ஒரே கல்வி முறையாக அமையும் போது, வேற்றுமையில் ஒற்றுமைக்கு மேலும் வலு சேர்க்கும். இவ்வாறு, கவர்னர் ரவி பேசினார்.

பல்கலை வேந்தர் தியாகராஜன் தலைமை வகித்தார். இந்தி துறை பேராசிரியர் சாந்தி எழுதிய, 'தமிழ் சித்தர்' என்ற ஹிந்தி நுாலும், ஆய்வு மைய இயக்குனர் லலிதா எழுதிய, ஆராய்ச்சி ஆலோசனை வளம் என்ற நுாலும் வெளியிடப்பட்டது.

இந்திய பல்கலை கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பங்கஜ்மிட்டல், நிர்வாக அறங்காவலர் மீனாட்சி சுந்தரம், பல்கலை துணைவேந்தர் பாரதி ஹரிசங்கர், பதிவாளர் கவுசல்யா உட்பட பலர் பங்கேற்றனர்.


வாசகர் கருத்து (14)

  • venugopal s -

    இல்லை தெரியாமல் தான் கேட்கிறேன், இவர் தினம் ஒரு பல்கலைக்கழகம் அல்லது ஏதாவது கல்லூரியில் மீட்டிங்கில் பேசுகிறாரே, அவர்கள் அழைக்கின்றனரா இல்லை இவராகவே போய் ஆஜர் ஆகிவிடுகிறாரா ?

  • g.s,rajan - chennai ,இந்தியா

    Tamil has been used Intelligently very well much for Minting Several thousand crores of Money by Kattumaram Chennai.

  • sahayadhas - chennai,பஹ்ரைன்

    முதலில் வடஇந்தியர்களுக்கு ரயிலில் பயன சீட்டு எடுக்க கற்றுகொடுங்க...

  • chennai sivakumar - chennai,இந்தியா

    தாய் மொழியே இங்கு தகராறு. இந்த லட்சனத்தில் தாய் மொழி கல்வியாம்?? சிரித்து சிரித்து வயிறு புண்ணாகும் போல இருக்கிறது.

  • K.n. Dhasarathan - chennai,இந்தியா

    20 க்கும் மேற்பட்ட மசோதாக்களை படிங்க எந்த மாநிலத்திலும் நடக்காத சாதனை நீங்கள் வைத்திருக்கும் பெண்டிங் பைல்கள்தான், அதாய் முதலில் கிளியர் பண்ணுங்க.....

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்