இது உங்கள் இடம்
உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:
எஸ்.ராமசுப்பிரமணியன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

நம் நாட்டுக்கும், நம் பாரத பிரதமருக்கும் இப்படியொரு பெருமையும், பொறுப்பும் கிட்டியுள்ளதற்காக, அரசியல் கட்சிகள் உட்பட நாட்டு மக்கள் அனைவரும் பெருமைப்பட வேண்டும்.
ஆனால், இதுவரை தங்கள் கட்சிக்கு கிட்டாத பேரும், புகழும், பிரதமர் நரேந்திர மோடிக்கு கிட்டுவதா என்ற வயிற்றெரிச்சலில், பொறாமையில் உள்ளனர் காங்கிரஸ் கட்சியினர். காங்., பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷோ, ஜி - 20 அமைப்புக்கு தலைமை வகிப்பது சுழற்சி முறையில் வழங்கப்படும் வாய்ப்பு. இந்தியாவுக்கு இந்த வாய்ப்பு கிடைப்பது தவிர்க்க முடியாதது. இதற்கு முன், அமெரிக்கா, பிரிட்டன், கனடா, தென் கொரியா உட்பட பல்வேறு நாடுகள், இந்த அமைப்புக்கு தலைமை ஏற்றுள்ளன. ஆனால், பிரதமர் மோடி அளவுக்கு, எந்த நாடும் இந்த வாய்ப்பின் வாயிலாக, மிகப் பெரிய அரசியல் நாடகமாடவில்லை' என்று குமுறி கொந்தளித்திருக்கிறார்.

ஆட்சி அதிகாரத்தில், 50 ஆண்டுகள் இருந்த போதிலும், பொருளாதார சிக்கல்களை களைய சிறு துரும்பை கூட கிள்ளி போட முனையாதது காங்கிரஸ் கட்சி. இத்தனைக்கும் பொருளாதார புலிகள் பலரை தன்னகத்தே கொண்டிருந்த கட்சி அது; அதிலும், ஒரு பொருளாதார புலி, 10 ஆண்டுகள் தொடர்ந்து பிரதமர் பதவியில் அமர்ந்து இருந்தார்.
அவர் புலி அல்ல... வெறும் புள்ளி தான் என்று, 20 நாடுகளுக்கும் தெரிந்திருந்ததால் தான், ஜி- - 20 மாநாட்டை நடத்தும் பொறுப்பு இந்தியாவிடம் வழங்கப்படவில்லை. இப்போது, அவர்களுக்கு நம்பிக்கை பிறந்து இருக்கிறது; நடத்தச் சொல்லி அழைப்பு விடுத்திருக்கின்றனர்.இதில், அங்கலாய்ப்பதில் எந்த அர்த்தமும் இல்லை, ஜெய்ராம் ரமேஷ் அவர்களே... உங்கள் வயிற்றெரிச்சலை இப்படியா வெளிச்சம் போட்டு காட்டிக் கொள்வது?
வாசகர் கருத்து (32)
உறுப்பினராக உள்ள ஒவ்வொரு நாட்டுக்கும் தலையயேற்க சந்தர்ப்பம் கொடுப்பது முறை. அதையும் கூட ஒன்றிய கும்பலின் முயற்சி என்று தனக்கு தானே முதுகில் தட்டிக்கொடுத்துக்கிறானுங்க...இதெல்லாம் ஒரு பொழப்பு...
பொருளாதார புலி என்று சொல்கிறீர்
பாஜகவுக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் நல்லவர்கள், எதைச் சொன்னாலும் நம்புவார்கள்
கேவலம் பிடிச்சவனுங்க....ஒரு வருடம் இருக்கப்போகும் தற்கால தலைமை என்பது உறுப்பினராக உள்ள எல்லா நாடுகளுக்கும் கொடுக்கப்படுவது உண்டு...இதையும் ஒன்றியத்தின் முயற்சி என்று பாஜக அடிவருடிகள் கேவலமாக முட்டுக்கொடுத்து புளங்காகிதம் அடைகிறானுங்க....
திமுக........வாழ்க
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
இதில் மோடிஜிக்கு வெறும் பெருமை மற்றும் பொறுப்பு இருந்து நாட்டு மக்களுக்கு என்ன பயன் ???பத்து பைசாவுக்குப் பிரயோஜனம் இல்லை விலைவாசி பொதுவாக அதிரடியாக உயர்வதால் சாதாரண மக்கள் மிகவும் கஷ்டப்ப்டுகின்றனர் ,எனவே அதை முதலில் கவனிக்க வேண்டும் .மத்திய அரசு ,மாநில அரசுக்கு இதில் கட்டாயம் பொறுப்பு அதிகம் உள்ளது . ஜி.எஸ்.ராஜன் சென்னை .