ADVERTISEMENT
கொடைக்கானல்: கொடைக்கானலில் கொட்டும் மழையிலும், தங்களின் உயிரை பணயம் வைத்து மின்பாதையை சரி செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர். அவர்களுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனை சமாளிக்க முன்கள பணியாளர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மின் கம்பங்கள் சாய்ந்தாலும், அதன் மீது மரங்கள் விழுந்தால் அதனை அகற்றவும், மின் விநியோகம் பாதிக்கப்படும் போது அதனை சரி செய்யவும் மின்வாரிய ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

இந்நிலையில், கொடைக்கானலில் நேற்று(டிச.,8) பரவலாக பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால், நகர் பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால், மக்கள் அவதிக்குள்ளாகினர். உடனடியாக தகவல் அறிந்த மின்வாரிய ஊழியர்கள், மழையை பொருட்படுத்தாமல், நகர் பகுதிகளில் மின்கம்பங்களில் ஏறி மின்வயர்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல், மக்களின் நலனுக்காக பணியாற்றிய மின்வாரிய ஊழியர்களுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். ஊழியர்களின் இந்த பணியை சிலர் மொபைலில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். அது வைரலாக பரவி வருகிறது. ஊழியர்களை பாராட்டி நெட்டிசன்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
வாசகர் கருத்து (3)
நாங்க கூட தான் கொட்டடும் மழை வெள்ளத்தில் கூட குண்டும் குழியான சாலை வெள்ளத்தில் சென்று தான் தினமும் வேலை பார்க்கிறோம்.ஆனால் எங்கள் தொகுதி எம்எல்ஏ வும் மாநில உள்ளாட்சி துறை அமைச்சர் ஒருவருடத்தில் சாலை சரி செய்கிறேன் என்று இரண்டாவது ஆண்டில் அடியெடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.ஆனால் சாதாரண கவுன்சிலர் அருகில் உள்ள வார்டுகளில் எல்லா சாலைகளையும் சரிப்படுத்தி விட்டார்.
மின் பணியாளர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
அரசு ஊழியர்கள் என்றால் இப்படி மதிப்புடன் இருக்க வேண்டும். சபாஷ்