ADVERTISEMENT
ஜோத்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் திருமண நிகழ்ச்சி நடைபெற்ற விபத்தில் உணவு தயாரிக்கும் போது காஸ் சிலிண்டர் கசிவால் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 52 பேர் காயமடைந்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து 60 கி.மீ தொலைவில் உள்ளது புங்ரா கிராமம். இங்குள்ள ஒரு வீட்டில் நேற்று (டிச.,8) திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. திருமணத்திற்காக உணவு தயார் செய்தபோது காஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் காஸ் சிலிண்டர்கள் திடீரென வெடித்து சிதறின. இதில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற 52 பேர் காயமடைந்தனர். 5 பேர் பலியாகினர். 12 பேர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த விபத்தில் காயமடைந்த 52 பேருக்கும் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மாவட்ட கலெக்டர் ஹிமான்சு குப்தா தெரிவித்தார். அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் இன்று மாலை மருத்துவமனையில் காயமடைந்தவர்களை சந்திப்பார் எனக் கூறப்படுகிறது.
டௌட்டுதான் . . . இனிமே சிலிண்டர் கம்பெனி ஆட்கள் ID-கார்ட் அணிந்துதான் டெலிவெரியோ - சர்வீஸோ - செய்ய வேண்டும் என்று கண்டிஷன் போட வேண்டும் . . . ஒவ்வொரு சிலிண்டரிலும் ரீபில் செய்த தேதி / ரீபில் செய்த கம்பெனி அட்ரஸ் - எல்லாம் கம்ப்யூட்டர் பிரிண்டர் மூலமாக தெளிவாக தெரியும் படி பிரிண்ட் செய்ய வேண்டும் .. . .