குஜராத் வெற்றி தேர்தலில் எதிரொலிக்கும்: அண்ணாமலை

அவரது அறிக்கை:
குஜராத்தில், 27 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பா.ஜ., மீண்டும் மகத்தான வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி, பிரதமர் மோடியின் வளர்ச்சி மாடலுக்கு, குஜராத் மக்கள் வழங்கிய வெகுமதி. சிறப்பான வெற்றிக்காக குஜராத் பா.ஜ.,வுக்கும், 1.92 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற, அம்மாநில முதல்வர் பூபேந்திராவுக்கும் வாழ்த்துகள்.
பா.ஜ.,வுக்கு, 2012ல் 47.9 சதவீதமாக இருந்த ஓட்டு சதவீதம், 2017ல், 50 சதவீதமாகவும், தற்போது, 52.60 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.
தமிழக மக்கள் அதிகம் வசிக்கும் மணிநகர் தொகுதியில், 75 சதவீத வாக்காளர்கள் பா.ஜ., வேட்பாளருக்கு ஓட்டளித்து உள்ளனர். பிரதமர் மோடி மீது, இடம்பெயர்ந்த தமிழக மக்கள் வைத்துள்ள அசைக்க முடியாத பாசத்தை நிரூபிக்கிறது.

குஜராத்தில் சிறுபான்மை மக்கள் அதிகம் வசிக்கும், 14 தொகுதிகளில், 12ல் பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ., வேட்பாளர்கள், 50 ஆயிரத்திற்கும் அதிகமான ஓட்டுகள் வித்தியாசத்தில், 45 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.
இது, அவர்களின் முந்தைய சாதனையை இரட்டிப்பாக்கி உள்ளது. குஜராத்தின் வெற்றி, 2024 லோக்சபா தேர்தலில் எதிரொலிக்கும்.
இவ்வாறு அவர் கூறிஉள்ளார்
வாசகர் கருத்து (43)
உத்திர பிரதேசம் ,ஜார்கண்ட் ,ராஜஸ்தான் ,டெல்லி,ஒரிசா எல்லாம் பிஜேபி குப்பற விழுந்து விட்டதே.இது தான் வரும் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் .மேலும் பல ஆண்டுகளாக ஹிமாச்சல்லில் பிஜேபி செல்வாக்குடன் இருந்து வந்தது .ஆனால் அங்கே தோல்வி என்றால் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதே அண்ணாமலை
குஜராத் தவிர மற்ற இடங்களில் இடைத்தேர்தல் உள்பட பிஜேபி படு தோல்வி இது நிச்சயமாக வரும் நாடாளுமன்றத்தில் தாங்கள் கூறியது போல் எதிரொலிக்கும் அண்ணாமலை அவர்களே
கீழே விழுந்தாலும் மீசையில்மண் ஒட்டவில்லை என்பது போல் சொல்லுகிறீர்கள் .இமாச்சல தவிர இடைத்தேர்தல் நடந்த ஏழு தொகுதிகளில் ஐந்தில் பிஜேபி தோல்வி இதில் உத்திர பிரதேசமும் அடங்கும் ஆரூர் அவர்களே
இங்கு பதிவு செய்பவர்கள் எல்லாம் பூனை கண்ணைய மூடிக்கொண்டு உலகமே இருந்தது என்ன்று நினைப்பது. வடக்கெ முகலாயர்கள் மற்றும் முகமதியர் ஆட்சியில் இந்துக்கள் பட்ட வேதனையய் அஙகு ( எழுதி வைக்க முடியாத நிலை) வாய் வழியாகாவே குடும்பத்தின் வாரிசுகளுக்கு எடுத்து கூறப்பட்ட உண்மை) அதனால் தான் பா ஜா கா (பி ஜெ பி ) வடக்கில் வளர்ந்து வருகிறது . இஙகு தமிழக்தில் முகலாயர்கள் மற்றும் முகமதியர்கள் ஆராட்சி பாதிப்பு இல்லை. அதன் வெளி பாடு தான் இஙகு சினிமா மூலம் பொய் சொல்லி ஆட்சி க்கு வந்த திராவிட கழகங்கள் வேரூன்றி இருக்கிறது . ஆனால் இனிமேல் அவ்வாறு ஏமாற்றி காலம் தள்ள இயலாத நிலை அவங்க சீப் ஆராசாட்சி நிலைம போல கடைசி அத்தியாயம் நடந்து கொண்டிருக்கிறது.
குஜராத்தில் பெட்ரா வெற்றி ஏற்கனவே தெரிந்த ஒன்று, அதனால் அது வெற்றியே இல்லை, மற்ற இடங்களில் எல்லாம் ஊத்திக்கிச்சே இப்ப அண்ணாமலை வேற வாயி வைச்சாச்சா போச்சு இவரை இப்போதே ஜோக்கர் என்கிறார்கள், இவரை கம்பு சுத்துவதை மட்டும் செய்ய சொல்லுங்க, இப்படி ஆருடம் சொன்ன கட்சி காணாமல் போயிடும். ,