ADVERTISEMENT
விவசாயிகள் இயந்திர மயமாக்களுக்கு செல்லும் வகையில் வேளாண் பொறியியல் துறை மூலம் டிராக்டர்கள், களை எடுப்பு இயந்திரம், நடவு இயந்திரம் ஆகியவை வாடகைக்கு விடப்படுகிறது.
குறைந்த அளவு வாடகையை வேளாண் பொறியியல் துறை வசூலிக்கும் என்பதால் அத்துறையின் மூலம் இயந்திரங்களை வாடகைக்கு எடுக்க விவசாயிகள் பலர் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் வேளாண் பொறியியல் துறையில் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே இயந்திரங்கள் கிடைப்பதால், சிறு, குறு விவசாயிகள் தனியாரிடம் அதிக வாடகை கொடுத்து இயந்திரங்களை வாடகைக்கு எடுத்து செல்கின்றனர்.
இதனால் கூடுதல் செலவை விவசாயிகள் சுமக்கின்றனர்.
டிராக்டர்கள் மட்டுமல்லாது மண் தள்ளும் இயந்திரம், நிலம் சமன் செய்யும் கருவி, அறுவடை இயந்திரம் உள்ளிட்டவைகளை ஊரகப் பகுதிகளில் பார்ப்பது அபூர்வமாக உள்ளது. இதன் பயனை அனைத்து விவசாயிகளும் அனுபவிக்க வசதியாக தாலுகா அளவிலான சேவை மையங்களை வேளாண் பொறியியல் துறை ஏற்படுத்த வேண்டும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!