ADVERTISEMENT
ஆமதாபாத்: குஜராத்தின் மோர்பி தொகுதியில் பா.ஜ., வேட்பாளர் வெற்றி பெற்றார்.
சமீபத்தில் தொங்கு பாலம் இடிந்து 135 பேர் உயிரிழந்த தொகுதி மோர்பி. இங்கு பா.ஜ., சார்பில், 5 முறை எம்.எல்.ஏ.,வாக இருந்த காந்திலால் அம்ருடியா களமிறக்கப்பட்டார். பால விபத்தின் போது, இவர் முன்னின்று மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டார். ஓட்டு எண்ணிக்கையில், காந்திலால் அம்ருடியா தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தார். முடிவில் 59 சதவீதத்திற்கு மேலான ஓட்டுகளை பெற்று அவர் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரசின் ஜெயந்தி படேல் 2வது இடத்தையும், ஆம் ஆத்மியின் பங்கஜ் ரன்சரியா 3வது இடத்தையும் பிடித்தனர்.
வாசகர் கருத்து (9)
பணம் பாதாளம் வரை பாயும் என்று சும்மாவா சொன்னார்கள். கற்காலத்திலேயே இருந்தது இக்காலத்திலும் பொற்காலமாகியுள்ளது குஜராத்தில் . ஒவ்வொரு தலைக்கும், கொலைக்கும் பத்துலச்சம், உயர்நீதிமன்றத்தின் துணையுடனும்
அந்த ரெட்டை நிர்ணயித்தது காங்கிரஸாக இருக்குமோ? இவ்வளவு துல்லியமாக திமுகவினந்தான் சொல்ல முடியும் செய்ய முடியும்.
அவன் ஊர்லஜயிகிறது பெரிசா இமாசல பிரதேசத்தில ஜயச்சுருக்கனும்
சென்ற முறை ஹிமாச்சலபி பிரதேசத்தில் ஜெயித்தபோது அவன் ஊராக இருந்ததோ?
தில்லியில் பூஜ்யம் சீட் வாங்கியபோது காங்கிரஸ் அவங்க ஊர் இல்லை என்று ஒப்புக்கொண்டார்களா?
சூடு சொரணை இல்லாத மோர்பி தொங்கு பால ஜெனங்கள்.
சூடு, சொரணை பற்றியெல்லாம் ஸ்டாலின் மற்றும் உதயநிதியிடம் கேளுங்கள். நீட் தேர்வு ரத்து செய்வது பற்றியெல்லாம் பேசிய உதயாவுக்கு தெரிந்திருக்கும்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
அர்ஜுன் சம்பத்து வீசப்பட்ட எலும்பு துண்டை பொருக்கி கொண்டு, சமீபத்தில் அண்ணாமலைக்கு ஏற்பட்ட அவமானத்தை திசை திருப்ப வேலை செய்கின்றான்.