Load Image
Advertisement

டிச.12 ல் குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் பதவியேற்கிறார்

முழு விபரம்:


புதுடில்லி: குஜராத் மற்றும் ஹிமாச்சலப் பிரதேச சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி இன்று(டிச.,08) நடந்து வருகிறது. குஜராத்தில் 150 தொகுதிகளுக்கும் மேல் பா.ஜ., முன்னிலை பெற்றுள்ளது. ஹிமாச்சல் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 68 தொகுதிகளில் காங்., மெஜாரிட்டிக்கு தேவையான அளவுக்கு முன்னிலை வகிக்கிறது.

குஜராத்தை பொறுத்தவரை இந்த முறை அபரித வெற்றி பெற்றுள்ளது. 1985 ல் காங்கிரஸ் 149 தொகுதிகளை பெற்றது. தற்போது பா.ஜ,. இந்த பெரும் சாதனையை முறியடித்து பா.ஜ., 155 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது.

Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Latest Tamil News

குஜராத்



குஜராத்தில், முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, 182 தொகுதிகள் உள்ள சட்டசபைக்கு, கடந்த 1 மற்றும் 5ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில், 64.33 சதவீத ஓட்டுகள் பதிவாகின. கடந்த 2017 லோக்சபா தேர்தலில், 68..39 சதவீத ஓட்டுகள் பதிவாகின. இங்கு வழக்கமாக பா.ஜ., மற்றும் காங்கிரஸ் இடையே தான் போட்டி இருக்கும். இந்த முறை, புதுடில்லி மற்றும் பஞ்சாபில் ஆளுங்கட்சியாக உள்ள ஆம் ஆத்மியும் களமிறங்கியது. இதனால் மும்முனை போட்டி ஏற்பட்டது.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள், பா.ஜ.,வுக்கு சாதகமாகவே உள்ளன. இந்தக் கட்சி பெரும்பான்மைக்கு தேவையான, 92 தொகுதிகளை விட அதிக தொகுதிகளில் வெல்லும் என, கருத்துக் கணிப்பில் கூறினர். இந்நிலையில் ஓட்டுகளை எண்ணிக்கை இன்று(டிச.,08) 8 மணிக்கு துவங்கி நடை பெற்று வருகிறது. இந்த ஓட்டு எண்ணிக்கையில் அதிக இடங்களை பாஜ., பிடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Latest Tamil News

ஹிமாச்சலப் பிரதேசம்:



ஹிமாச்சலப் பிரதேசத்தில், 68 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த மாதம் 12ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இங்கும் இன்று ஓட்டு எண்ணிக்கை இன்று நடை பெற்று வருகிறது.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள், பா.ஜ., மற்றும் காங்கிரஸ் இடையே மிகவும் குறைந்த சீட்களே வித்தியாசமாக இருக்கும் என தெரிவிக்கின்றன. இதனால், ஆட்சி மாற்றம் ஏற்படுமா அல்லது மாறி மாறி கட்சிகள் ஆட்சிக்கு வரும் பாரம்பரியம் மாற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Latest Tamil News

கடந்த தேர்தல் வெற்றி



குஜராத்தில் பா.ஜ., 99 தொகுதிகளிலும், காங்கிரஸ் 77 தொகுதிகளையும் கைப்பற்றியது. ஹிமாச்சலில் இழுபறி ஏற்பட்டால் சுயேச்சைகளை வளைப்பதற்காக, பா.ஜ., மற்றும் காங்கிரஸ் ஏற்கனவே திட்டங்களை வகுத்துள்ளன.கடந்த 2௦17 தேர்தலில், பா.ஜ., 44ல் வென்றது. காங்கிரஸ், 21ல் வென்றது. ஒரு தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வென்றது.



வாசகர் கருத்து (52)

  • venugopal s -

    குஜராத் மட்டுமே இந்தியா அல்ல!

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    நேர்மையாக மக்களுக்கு சலிப்புத்தட்டாமல் ஆண்டிருக்கிறார்கள். அடிமட்டத்திலிருப்பவர்களும் கூட பயனடையும் அளவிலான திட்டங்கள் - முக்கியமாக பொய்களை அள்ளி விட்டு ஜெயிக்கவில்லை. கேஜ்ரியின் 'அனைத்தும் இலவசம்' வியூகம் கூட அங்கு எடுபடவில்லை. நேர்மைக்கும் அனைத்துதரப்பினரையும் உள்ளடக்கிய ஒரு செயல்திறனுக்கும் கிடைத்த வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும். வாழ்த்துகள்

  • dgfdfhgfjh - chennai,இந்தியா

    ஒரு ஷீரோவுக்கு , பொம்மலாட்ட பொம்மைக்கு வாக்களித்துள்ளார்கள் குஜராத்தியர்கள். பல லச்சக்கணக்கான கொடிகளை கொட்டி பெற்ற வெற்றி . அணைத்து மாநிலங்களிலும் நடக்காது .

  • கோகுல் -

    பிஜேபியே இனி இந்தியாவின் நிரந்தர ஆளும் கட்சி

  • LAX - Trichy,இந்தியா

    தேசத்துக்கும்.. தெய்வீகத்துக்கும்.. எதிரானவர்களின் கதறல்களும்.. குமுறல்களும் டிசைன்.. டிசைனா.. வேற லெவல்ல இருக்கே.. 😇 👌🏽 👌🏽

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement