முப்படை தளபதி பிபின் ராவத் நினைவு தினம்: ஊட்டி மக்கள் மரியாதை
குன்னுார்: குன்னுார் அருகே கடந்தாண்டு டிச., 8ல் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பலியானார். இந்நிலையில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு, இன்று(டிச.,08) மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
![Latest Tamil News]()
செடிகள் சூழ்ந்த இடத்தில் பிபின் ராவத் உயிருருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டார். ராணுவ பயிற்சி கல்லுாரி குரூப் கேப்டன் வருண் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார்.
இந்த கோர விபத்தில், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத், பிரிகேடியர் எல்.எஸ்., லிடர், லெப்., கர்னல் ஹர்ஜிந்தர் சிங், குருசேவக், ஜித்தேந்திர குமார், நாயக் விவேக் குமார், சாய் தேஜா, ஹவில்தார் சட்பல் உட்பட, 13 பேர் இறந்தனர்.
![Latest Tamil News]()
இவர்களின் உடல்கள் ஆம்புலன்ஸ்சில் கோவை சூலுார் விமானப்படை தளத்துக்கு கொண்டு சென்ற போது வழிநெடுக்கிலும் மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற குரூப் கேப்டன் வருண், டிச., 15ல் உயிரிழந்தார்.
உலகையே உலுக்கிய அந்த விபத்து நடந்து இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. இதையடுத்து, ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் கிராம மக்கள் அஞ்சலி செலுத்த உள்ளனர். ராணுவம் உதவிகளை செய்வதுடன், மருத்துவ முகாம் நடத்தி நல உதவிகள் வழங்க உள்ளது.
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இந்திய முப்படை தளபதி, அவரது மனைவி மற்றும் இந்திய ராணுவ வீரர்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் ஓராண்டு நினைவு தினத்தை ஒட்டி, ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகள் சங்கத்தினர் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

நீலகிரி மாவட்டம், குன்னுார் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லுாரிக்கு முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட, 14 பேர், கோவை சூலுார் விமானப்படை தளத்தில் இருந்து, 2021 டிச., 8ம் தேதி ஹெலிகாப்டரில் புறப்பட்டனர். குன்னுார் காட்டேரி அருகே நஞ்சப்பா சத்திரத்தில் கடும் மேகமூட்டம் காரணமாக, ஹெலிகாப்டர் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
செடிகள் சூழ்ந்த இடத்தில் பிபின் ராவத் உயிருருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டார். ராணுவ பயிற்சி கல்லுாரி குரூப் கேப்டன் வருண் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார்.
இந்த கோர விபத்தில், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத், பிரிகேடியர் எல்.எஸ்., லிடர், லெப்., கர்னல் ஹர்ஜிந்தர் சிங், குருசேவக், ஜித்தேந்திர குமார், நாயக் விவேக் குமார், சாய் தேஜா, ஹவில்தார் சட்பல் உட்பட, 13 பேர் இறந்தனர்.

இவர்களின் உடல்கள் ஆம்புலன்ஸ்சில் கோவை சூலுார் விமானப்படை தளத்துக்கு கொண்டு சென்ற போது வழிநெடுக்கிலும் மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற குரூப் கேப்டன் வருண், டிச., 15ல் உயிரிழந்தார்.
உலகையே உலுக்கிய அந்த விபத்து நடந்து இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. இதையடுத்து, ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் கிராம மக்கள் அஞ்சலி செலுத்த உள்ளனர். ராணுவம் உதவிகளை செய்வதுடன், மருத்துவ முகாம் நடத்தி நல உதவிகள் வழங்க உள்ளது.
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இந்திய முப்படை தளபதி, அவரது மனைவி மற்றும் இந்திய ராணுவ வீரர்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் ஓராண்டு நினைவு தினத்தை ஒட்டி, ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகள் சங்கத்தினர் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
சொன்னது என்னாச்சு!
விபத்து நடந்த இடத்தில், நினைவு சின்னம் அமைக்க கோரிக்கை எழுந்தது. குன்னுார் ராணுவ பயிற்சி கல்லுாரிக்கு விபத்து நடந்தபின் வந்த முதல்வர் ஸ்டாலின் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து சென்றார். ஓராண்டு ஆகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என்பது அப்பகுதி மக்களின் ஆதங்கம்.
வாசகர் கருத்து (4)
அந்த ராணுவ வீரர் திராவிட கழக்கட்சி நபராக இருந்திருந்தால் எப்போதோ சிலை எடுக்கப்பட்டிருக்கும் இருக்கட்டும் பார்க்கலாம் எதிர்காலத்திலாவது நடக்குமா என்று
அந்த விபத்தில் மரணம் அடைந்த சக ராணுவ வீரர்களுக்கும் உரிய மரியாதை அளிக்க வேண்டும்.
நினைவஞ்சலி
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
தேசத்தை அல்லும் பகலும் அயராது காக்கும் தியாக செம்மல்களாம், தீர, பராக்கிரம ராணுவ வீரர்களுக்கு நமது வீர வணக்கங்கள். கோர விபத்தில் மறைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடன் உயிர் இழந்த ராணுவ வீரர்களுக்கு நமது கண்ணீர் அஞ்சலி. ராணுவ வீரர்களின் தேசிய பாதுகாப்பு சேவை தொடரட்டும். நமது இதயத்தில், மனதில் அவர்கள் பற்றிய நன்றி கலந்த நினைவு இறைவன் அருளால் நீங்காது அமையட்டும். ...