ADVERTISEMENT
மதுரை, --பொங்கல் பண்டிகை வருவதை முன்னிட்டு மேலுார் பகுதிகளில் வெல்லம் விற்பனை துவங்கினாலும், விலை குறைவால் விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர்.
பொங்கல் பண்டிகையில் வெல்லத்திற்கு முக்கிய பங்கு உண்டு. இதற்கு மூலப்பொருளான கரும்பு மேலுார் பகுதியில் இரு ரகங்களாக உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் செங்கரும்பு கடித்து சுவைக்கவும், ஆலைக்கரும்பு வெல்லம் தயாரிக்கவும் பயன்படுகிறது. பொங்கல் வருவதை முன்னிட்டு மேலுார் கொட்டக்குடி, வெள்ளலுார், புதுப்பட்டி பகுதிகளில் வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.
கொட்டக்குடி விவசாயி ரவி: ஆலைக் கரும்பு நடவு செய்வது முதல் வெல்லம் தயாரிப்பது வரை ஏக்கருக்கு ரூ.96 ஆயிரம் செலவு செய்கிறோம். இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் வெல்லம் ரூ.90 ஆயிரத்திற்கு விற்கிறது. செம்மண்ணில் விளையும் கரும்பின் சுவை அதிகம் என்பதால் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும், கேரளாவுக்கும் அனுப்பப்படுகிறது. இந்தாண்டு வெல்லம் கிலோ ரூ. 35 முதல் ரூ.45 வரை விற்பதால் நஷ்டம் ஏற்படுகிறது. கரும்பு விவசாயிகளை பாதுகாக்க அரசு கொள்முதல் செய்வதோடு, இடுபொருட்களை மானிய விலையில் வழங்க வேண்டும், என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!