Load Image
Advertisement

புதுடில்லியை மாற்ற பிரதமரின் ஆசியை கோரும் கெஜ்ரிவால்

Tamil News
ADVERTISEMENT

புதுடில்லி: டில்லியை சிறந்த நகரமாக மாற்ற பிரதமரின் ஆசியை எதிர்பார்க்கிறேன் என அம்மாநில முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

கொண்டாட்டம்



Latest Tamil News

டில்லி மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டன. அதில், மாநிலத்தை ஆளும் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மையான வார்டுகளில் வெற்றி பெற்று மாநகராட்சியை பா.ஜ.,விடம் இருந்து கைப்பற்றியது. இதனையடுத்து ஆம் ஆத்மி தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேண்டுகோள்



Latest Tamil News
இதனைதொடர்ந்து தொண்டர்கள் மத்தியில் அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் பேசியதாவது: இந்த வெற்றியை அளித்ததற்காகஅளித்த டில்லி மக்களுக்கு பாராட்டுகளையும், மாற்றத்தை கொண்டு வந்ததற்காக நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன்.

தற்போது, டில்லியில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்காக பா.ஜ., மற்றும் காங்கிரசிடம் ஆதரவை எதிர்பார்க்கிறேன். இதற்காக மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். டில்லியை சிறந்த நகரமாக மாற்ற பிரதமரின் ஆசியை கேட்கிறேன். டில்லி மாநகராட்சியை ஊழல் அற்றதாக மாற்றுவோம். ஒட்டு மொத்த நாட்டிற்கும் ஒரு செய்தியை அனுப்பி உள்ளது.இவ்வாறு கெஜ்ரிவால் பேசினார்.

உத்தரவு



Latest Tamil News
துணை முதல்வர் மணிஷ் சிசோடியா பேசுகையில், ஆம் ஆத்மிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிய மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இது வெற்றி மட்டுமல்ல. டில்லியை சிறந்ததாகவும், சுத்தமாகவும் வைத்து கொள்வதற்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய உத்தரவு அளித்துள்ளனர். இவ்வாறு கெஜ்ரிவால் பேசினார்.



வாசகர் கருத்து (36)

  • அப்புசாமி -

    ஒத்துழைப்பா? உங்களுக்கு குடைச்சல் குடுக்காம இருந்தாகே பெரிய விஷயம்.

  • Sivagiri - chennai,இந்தியா

    விடியலை விட பெரிய டுபாக்கூர் பார்ட்டி - இதுநாள் வரை கார்பரேஷன் பாஜக கையில் இருக்குன்னு சொல்லி தப்பிச்சா மாதிரி இனி முடியாது.. டில்லி மீடியாகாரங்க இனிமேதான் கிழிப்பாய்ங்க . . அதோட இ.டி - ஐ.டி பிடி இருகப் போகுது

  • vijay - coimbatore,இந்தியா

    இலவசம் இலவசம்.. எப்போ எப்போ... இலவசம் சொல்லி சொல்லி

  • Sivagiri - chennai,இந்தியா

    சரி - இது நீங்க பேசிக்கிட்டதுதானே - காங்கிரஸை விரட்டியதற்கு - பேசியபடி சம்பளம் வந்து சேரும்

  • P SIVASAKTHI NAYAGAN - UDUMALPET,இந்தியா

    கற்பழிப்பு குற்றவாளியை அழைத்து மசாஜ் பண்ணச் சொல்லும் மந்திரிக்கு வாக்களிக்கும் முட்டாள்கள் நிறைந்த நகரம் டெல்லி. காற்றில் மட்டுமல்ல மாசு .....

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்