ADVERTISEMENT
புதுடில்லி: அ.தி.மு.க., தலைமை தொடர்பான வழக்கின் விசாரணை தொடர்ந்து ஒத்திவைக்கப்படுவதற்கு உச்ச நீதிமன்ற அமர்வு அதிருப்தி தெரிவித்தது.
அ.தி.மு.க.,வில் ஒற்றை தலைமை பிரச்னை தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்கிறது. முன்னாள் முதல்வர் பழனிசாமி கட்சியின் தற்காலிக பொதுச் செயலராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்ற சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மற்றொரு முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி, சுதான்சு துலியா அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர் ஆஜராகாததால், விசாரணையை ஒத்திவைக்கும்படி பன்னீர்செல்வம் தரப்பில் கோரப்பட்டது.
இதற்கு அமர்வு கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளது. 'தொடர்ந்து விசாரணையை ஒத்திவைத்து எங்களை சங்கடத்தில் ஆழ்த்தாதீர்கள். வரும், ௧௨ம் தேதி நிச்சயம் விசாரணை நடத்தப்படும்' என, அமர்வு குறிப்பிட்டுள்ளது.
அ.தி.மு.க.,வில் ஒற்றை தலைமை பிரச்னை தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்கிறது. முன்னாள் முதல்வர் பழனிசாமி கட்சியின் தற்காலிக பொதுச் செயலராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்ற சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மற்றொரு முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

இதற்கு அமர்வு கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளது. 'தொடர்ந்து விசாரணையை ஒத்திவைத்து எங்களை சங்கடத்தில் ஆழ்த்தாதீர்கள். வரும், ௧௨ம் தேதி நிச்சயம் விசாரணை நடத்தப்படும்' என, அமர்வு குறிப்பிட்டுள்ளது.
வாசகர் கருத்து (8)
" வாய்தா ராணி " வாரிசுகளாயிற்றே பின்பற்றுகிறார்கள்.
எல்லா அரசியல் வியாதிகளும் எப்படி பதவி தக்க வைத்துக் கொள்ளலாம் என பார்ப்பார்கள் என்ன செய்வது ஒட்டு போடும் நமக்கு தெளிவு நிலை இல்லை
ஒவ்வொரு நாளும் ஐம்பதுக்கும் மேற்பட்ட வழக்குகள் லிஸ்ட்டில் போடறீங்களே? வாய்தாவை நம்பித்தானே போடுறீங்க? அத்தனை வழக்குகளையும் ஒரே நாளில் நடத்த முடியுமா? கலீஜியத்துக்கே வெளிச்சம்.
ஒபிஎஸ்ஸும் அவர் குடும்பம் மற்றும் ஆதரவாளர்கள் திமுக அனுதாபிகளாக இருப்பதால் அந்த கட்சிக்கு தாவி அந்த கட்சியை நல்லாவே பலப்படுத்தி அதிமுகவே ஒழிக்கலாம்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
உச்ச நீதிமன்றத்தால் கட்சியை கலைக்க முடியாது . ஆனால் பன்னீர்செல்வமும் , பழனிசாமியும் வேண்டாம் என்று சொல்லி வேறு ஒருவரை தேர்ந்தெடுக்க சொல்லி வற்புறுத்தலாம் . அப்போதுதான் அதிமுக காப்பாற்றப்படும்