ADVERTISEMENT
சென்னை: தமிழக பா.ஜ.,வின் சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சி மற்றும் ஓபிசி பிரிவு மாநில பொதுச் செயலாளர் திருச்சி சூர்யா சிவா இருவரும் போனில் ஆபாச வார்த்தைகளால் வாக்குவாதத்தில் ஈடுபட்டது சர்ச்சையை கிளப்பியது. இந்த சம்பவம் தொடர்பாக இருவரிடமும் விசாரணை நடத்தப்படும் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
அதன்படி, டெய்சி, சூர்யா சிவா இருவரும் கட்சியின் விசாரணையில் ஆஜரான பின்னர், சமாதானம் ஆகி கூட்டாக பேட்டி அளித்தனர். ஆனாலும், சூர்யா சிவாவை 6 மாதங்களுக்கு பா.ஜ.,வின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அண்ணாமலை அறிவித்தார்.
இந்த நிலையில் பா.ஜ.,வின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக சூர்யா சிவா இன்று (டிச.,6) அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ‛அண்ணாமலைக்கு நன்றி , இதுவரை இந்த கட்சியில் பயணித்தது எனக்கு கிடைத்த இனிய அனுபவம். நீங்கள் தமிழக பா.ஜ.,விற்கு கிடைத்த பொக்கிஷம். வரக்கூடிய தேர்தலில் கண்டிப்பாக பா.ஜ., இரட்டை இலக்கை அடையும். அதை அடைய வேண்டும் என்றால் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் மாற்றப்பட வேண்டும். இல்லையென்றால் கடந்த கால பா.ஜ.,வை போலவே தமிழகத்தில் பா.ஜ., நீடிக்கும். இத்துடன் என் பா.ஜ., உடனான உறவை நான் முடித்துக் கொள்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து (29)
அரசியல் ஒரு சாக்கடை அதில் எங்கிருந்து எங்குவேண்டுமானாலும் செல்லலாம்
திருச்சி சிவா வோட மகனா நீ ,
அடுத்து அண்ணாமலையையும் தூக்க வேண்டியது தான்.
இவரு அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
தன்மானம் உள்ள தமிழர்கள் யாரும் பாஜகவில் அதிக நாட்கள் தொடர்ந்து இருக்க முடியாது!