சென்னை: தொலைதூரக் கல்வியில் படித்தவர்கள் ஆசிரியர் பணிக்குத் தகுதியானவர்கள் அல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அப்போது, தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், 'ஆசிரியை நித்யா, பி.எட் தமிழில் படித்துப் பின்னர், பி.ஏ. ஆங்கிலம் படித்ததாலும், பி.ஏ.,வை தொலைதூரக் கல்வியில் படித்ததாலும் அவருக்கு ஆங்கில ஆசிரியை பிரிவில் பதவி உயர்வு வழங்க முடியாது' என்று வாதிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ஆசிரியை நித்யா தமிழ் ஆசிரியை பிரிவில் பதவி உயர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறினார்.

மேலும், கல்வி நிறுவனங்களுக்கு நேரில் சென்று படித்தவர்கள்தான் ஆசிரியர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகக் குறிப்பிட்டார். தொலைதூரக் கல்வியில் படித்தவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் அல்ல என்று குறிப்பிட்ட நீதிபதி, இட ஒதுக்கீட்டின் கீழ் நியமித்தாலும் ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றும் தற்போது தொலைதூரக் கல்வியில் படித்தவர்கள் ஆசிரியர் பணியில் இருப்பது வேதனைக்குரியது என்றும் கூறினார். அதுமட்டுமின்றி தொலைதூரக் கல்வியில் படித்தவர்களை ஆசிரியர்களாக நியமிக்கும் நடைமுறைகளை தமிழக அரசு 3 மாதங்களில் மறுஆய்வு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
வாசகர் கருத்து (20)
தொலைதூரக் கல்வி பின்னே எதுக்கு குடுக்கறாங்களாம்?
அப்படியென்றால் தொலைதூர கல்வியை நடத்துகிற பல்கலைக் கழகங்களும் தகுதியில்லாதவைகளே.
அப்படி என்றால் அந்த வழியில் கல்வி பயின்றவர்களுக்கு யார் வேலை கொடுப்பார்கள்? வேலை கிடைக்க தகுதியற்ற படிப்பு என்றால் அதை ஏன் அந்த வழியில் பயிற்றுவிக்க வேண்டும்? இந்த விஷயத்தில் திறமைதான் அளவுகோலாக இருக்க வேண்டுமேயன்றி எந்த வழிக்கல்வி என்பது அளவுகோலாக இருக்கக் கூடாது. இப்படி ஒரு தீர்ப்பு சொல்லி பலருடைய வாழ்க்கையை இருட்டில் தள்ளுகிறது நீதிமன்றம்.
ஒரு சில பல்கலைக்கழகங்களைத் தவிர்த்து பெரும்பான்மையான பல்கலைக்கழகங்களின் பிழைப்பு ஒடுவதே இந்த தொலைதூர கல்வியால்தான். மேலும் எந்த நிறுவனத்திலும் ஏற்றுக்கொள்ளப்படாத இந்த கல்விமுறையால் பல்கலைக்கழகங்களைத் தவிர்த்து வேறு யாருக்கும் பயன் இல்லை. இதற்கு யார் முடிவு கட்டுவது?
கொடுமை டா சாமி இதுக்கு முன்னாடி எல்லாம் உள்ள Teachers எந்த ஒரு தகுதி தேர்வோ நியமன தேர்வோ எழுதவில்லை seniority படி Posting போட்டாங்க அது பத்தாதுனு Increment வேணும்னு Distance Education ல வேற Degree அத எல்லாம் Dismiss பண்ணாம இப்ப படிக்குற படிச்சு வேலை இல்லாம உள்ள அப்பாவி மக்களை இப்படி புதுபுதுசா Rules ஆ போட்டு இப்போ ஆசிரியர் தேர்வுக்கு Eligibility Test and appointment க்கு தனி Exam New Syllables New Rules னு சாவு அடிக்குறேங்க Distance Education அப்போ எதுக்கு மொத்தமா இழுத்து மூட வேண்டியதானா ஆசிரியர்கள் மட்டும் Govt staff ஆ மற்ற Department எல்லாம் எல்லாருக்கும் ஒரு நியாயம் தான வேணும். பல்கலைக்கழகம் Certificate எல்லாம் ஒரே தகுதி தான் UGC சொல்லுது Same Exam same question paper same mark list correction எல்லாம் ஒரே மாதிரி தான் அப்பறம் என்ன தான் Problem... UGC Regular and Online and Distance education all degree same value னு சொல்லுது நாங்க எத தான் ஏத்துகிறது. இப்படி ஒவ்வொரு New Rules ஆ போடுரேங்களே NEET Eligibility Test New syllables னு நாட்டை ஆளுற அரசியல் வாதிகளுக்கு ஒரு New Exam Eligibility Test ஒரு நபர் ஒன்று அல்லது இரண்டு தடவ தான் தேர்தலில் போட்டியிடனும்னு ,பரம்பரை பரம்பரையா வாழையடி வாழையா வாரிசு அரசியல் இருக்க கூடாது மக்கள் வரி பணத்தை கொள்ளை அடிக்க கூடாது எல்லாம் 100% சரியா இருக்கனும் சொன்ன வாக்குறுதி காப்பாற்றனும் னு புது சட்டம் கொண்டு வரனும் சொல்லுங்க Order போடுங்க அது தான் நாட்டை நல்ல ஒரு ஜனநாயகம் குடியரசா வல்லரசா மாற்றும் For exam Recent ஆ நடந்த குஜராத் Election MLA க்கு நிற்குற வேட்பாளர் சொத்து ரூ.627 கோடி Maximum கோடீஸ்வரன்கள் வேட்பாளர்கள் எல்லாம் இப்போ உள்ள MLA, MP,....மக்கள் பிரதிநிதிகள் Maximum பேர் மேல கொலை கொள்ளை திருட்டு ஊழல்......Etc criminals case இருக்கு அவங்களுக்கு எல்லாம் எந்த ஒரு தகுதி வரம்பு இல்லை பாவம் அப்பாவி ஜனங்க மேல புது புதுசா சட்டம் போட்டு கொடுமை படுத்துரேங்க.... So sad