ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பாரத் ஜோடோ பாத யாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி., ராகுல், பா.ஜ., அலுவலகத்தை தாண்டிய போது, அங்கு கூடியிருந்த அக்கட்சியினரை பார்த்து 'பிளையிங் கிஸ்' கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த யாத்திரை சிறிது நேரத்தில் ஜல்வார் நகரை கடந்து சென்றது. அங்கிருந்த பா.ஜ., அலுவலகத்தையும் இந்த யாத்திரை கடந்தது சென்றது. அப்போது, பா.ஜ., அலுவலக மாடியில் ஏராளமானோர் கூடியிருந்தனர்.
அவர்களை பார்த்த ராகுல், 'பிளையிங் கிஸ் ' கொடுத்துவிட்டு, அவர்களை நோக்கி கையசைத்தபடி நடந்து சென்றார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மோடிக்கு ஆதரவாக கோஷம்
இதற்கு முன்பும், ம.பி., மாநிலம் மால்வா மாவட்டத்தில் பாத யாத்திரை மேற்கொண்டிருந்த ராகுலின் பாத யாத்திரையின் போது, அங்கு கூடியிருந்த பலர் ' மோடி, மோடி' என கோஷம் போட்டனர். அவர்களை பார்த்த ராகுல், பாத யாத்திரையில் பங்கேற்கும்படி கூறினார்.
இருப்பினும் அவர்கள் கோஷம் போடுவதை நிறுத்தவில்லை. இதனை தொடர்ந்து, அவர்களை நோக்கி 'பிளையிங் கிஸ்' கொடுத்துவிட்டு பாத யாத்திரையை தொடர்ந்தார். இந்தூர் நகரிலும் ராகுலின் பயணத்தின் போது, 'மோடி மோடி ' என பலர் கோஷம் போட்டது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து (21)
காரணமில்லாம அமேதி தொகுதி மக்கள் விரட்டியடிக்க 😇வில்லை.
பார்லிமெண்டில் பிரதமர் மோதியை மட்டுமே அடிக்கடி சந்திக்கவேண்டியிருந்தது, சாலைக்கு வந்ததும் அவரது தொண்டர்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது பற்றி மகிழ்ச்சின்னு, டிவிட்டர் பக்கத்தில் வெளியிருவாரு.... ஹாஹாஹா....
ஒரு தலைவன் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் அனைவரையும் ஒன்றுபோல் பார்க்கவேண்டும்... மற்றவர்களை எதிரியாக பார்க்காமல், அவரின் அந்த செய்கை, அவர் எப்போதும்போல எதார்தமாகவே இருக்கிறார்..
இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்கிறார்கள், இளைஞர்கள்... அரசியலுக்கு வந்தால் பப்பு என பிதற்றுகிறார்கள், பயப்படுகிறார்கள். அவர் ஒரு MP மக்கள் மன்றத்தில் வாதாடியவர்
அதெல்லாம் தெரியவேண்டிய தேவையுமில்லை,அவசியமுமில்லை...
பாகிஸ்தான்,புல்வாமா,முஸ்லீம் மதம்,ஜாதி..இதுதான்...நூலினால் ஆடும் பொம்மைகள்...
ராகுல் நடைப்பயணத்தில் பாஜக அலுவலகத்தை கடக்கும் போது அங்கு கூடியிருந்த பாஜகவினர், ஹலோ ராகுல் வாங்க, ஒரு கப் டீ அருந்திவிட்டு போகலாம் என்று அழைத்து இருக்கலாம். அவரும் ஜஸ்ட் லைக் தட் என்று பாஜக அலுவலத்துக்கு சென்று டீ அருந்திவிட்டு அவர்களுடன் செல்ஃபி எடுத்துவிட்டு சென்று இருப்பார். ஹீ ஈஸ் எ நைஸ் மேன்.