ADVERTISEMENT
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழகத்தில் சட்டசபை தொகுதிகள் வாரியாக,வரும் ஜனவரி 1ம் தேதியை தகுதி பெறும் நாளாக கொண்டு சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனையொட்டி, வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்ய WWW.nvsp.in; https://Voterportal.eci.gov என்ற இணையதளங்கள் வழியாகவும், 'VOTER HELP LINE' என்ற மொபைல் போன் செயலி வழியாகவும் வாக்காளர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.
மேலும், வாக்காளர்களின் வசதிக்காக, விண்ணப்பம் நேரடியாக பெற்றும் பெயர் சேர்த்தல், நீக்கல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. முதற்கட்டமாக கடந்த 12, 13 ஆகிய தேதிகளிலும், இரண்டாம் கட்டமாக கடந்த 26, 27 ஆகிய தேதிகளிலும் சிறப்பு முகாம் நடந்தது.
கடலுார் மாவட்டத்தில் திட்டக்குடி (தனி), விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, கடலுார், குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் (தனி) ஆகிய 9 சட்டசபை தொகுதிகள் உள்ளன.
மாவட்டம் முழுதும் 2,301 ஓட்டுச்சாவடி மையங்கள் உள்ளன. வரைவு வாக்காளர் பட்டியலின்படி, மாவட்டத்தில் 10 லட்சத்து 51 ஆயிரத்து 236 ஆண்கள்; 10 லட்சத்து 83 ஆயிரத்து 310 பெண்கள்; 256 மூன்றாம் பாலினத்தவர் என, மொத்தம் 21 லட்சத்து 34 ஆயிரத்து 802 வாக்காளர்கள் உள்ளனர்.
கடலுார் மாவட்டத்தில் நடந்த சிறப்பு முகாமில் புதிதாக பெயர் சேர்க்க 33 ஆயிரத்து653 விண்ணப்பங்கள்; நீக்கம் செய்ய 15 ஆயிரத்து 801; முகவரி மாற்றம் மற்றும் திருத்தம் செய்ய8 ஆயிரத்து 408 என, மொத்தம் 57 ஆயிரத்து 862 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
பெறப்பட்டவிண்ணப்பங்களில் உள்ள விபரங்களை சரி பார்க்க, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
கள ஆய்வில் தகுதியில்லாத விண்ணப்பங்கள் நீக்கம் செய்யப்படுகிறது.
தகுதியான விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, கணினியில் வாக்காளர்கள் விவரங்கள் பதிவேற்றும் பணிகள் மாநகராட்சி, நகராட்சி, தாலுகா அலுவலகங்களில் தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணி முடிந்ததும், வரும் ஜனவரி 5ம் தேதி வெளியிடப்படும் இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறும்.
ஜனவரி 25ம் தேதிக்கு பிறகு வாக்காளர் அடையாள அட்டை, வாக்காளர்களின் வீடுகளுக்கு தபால் மூலமாக அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!