சென்னை : சொத்து விற்பனை பத்திரங்களை பதிவு செய்யும்போது, அதன் முன் ஆவணங்களை சரிபார்க்க, எத்தனை ஆண்டுகளுக்கான வில்லங்க விபரங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக சார் - பதிவாளர்கள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் சொத்து விற்பனை பதிவில், மோசடி மற்றும் ஆள்மாறாட்டத்தை தடுக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை பதிவுத் துறை எடுத்து வருகிறது.
பதிவுக்கு வரும் சொத்தின் முன் ஆவணங்களை சரி பார்க்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
குறிப்பாக, சொத்தின் தாய் பத்திரத்தின் அசல் பிரதியை சார் - பதிவாளர்கள் சரிபார்ப்பதுடன், அதன் குறிப்பிட்ட சில பக்கங்களை 'ஸ்கேன்' செய்து, புதிய ஆவணத்துடன் இணைக்க வேண்டும்.
இதில், சொத்தின் உண்மை தன்மையை ஆய்வு செய்ய, வழக்கமாக, 30 ஆண்டுகளுக்கான வில்லங்க சான்று ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

இது குறித்து, சார் - பதிவாளர்கள் கூறியதாவது:
சொத்தின் உண்மை தன்மையை ஆய்வு செய்ய, அதன் முன் ஆவண ஆய்வில் அசல் பத்திரங்கள் தேவை.
இதில், கடைசியாக பதிவான விற்பனை பத்திரமும், அதற்கு முந்தைய பத்திரமும் தான் முக்கியத்துவம் பெறுகின்றன.
சில சொத்துக்களில், சமீப ஆண்டுகளில் எவ்வித விற்பனை பரிமாற்றமும் நடக்காத நிலையில், 30 ஆண்டு வில்லங்க சான்று போதுமானதாக இல்லை.
இதனால், 50 முதல் 60 ஆண்டுகளுக்கான வில்லங்க விபரங்களை திரட்ட வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதில், தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லாததால், பொதுமக்களுக்கும், பதிவாளர்களுக்கும் குழப்பம் ஏற்படுகிறது.
பத்திரப்பதிவின் போது எத்தனை ஆண்டுகளுக்கான வில்லங்க சான்றுகளை ஆய்வு செய்ய வேண்டும் என்பதற்கு, கால வரையறை நிர்ணயம் செய்ய வேண்டும்.
இது குறித்து, பதிவுத்துறை தலைவரிடம் முறையிடப்பட்டு உள்ளது. இதில், விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாசகர் கருத்து (7)
0000
பொது ஜனங்களை ஏமாற்ற குழப்ப அவர்களிடம் அதிகப்படியாக லஞ்சம் வாங்க, அல்லது எமதவர்களின் சொத்துகளை அரசியல்வாதிகளும் அதிகாரகளும ஆட்டை போட வசதியாக இப்படி பல சட்டங்கள் ..
சொல்வது முற்றிலும் உண்மை.
சுதந்திரம் அடைந்து முக்கால் நூற்றாண்டு ஆகிவிட்டது இன்னும் பிரிட்டிஷ் கால நினைவிலேயே இருக்கிறார்கள். செயற்கைக்கோள் மூலம் சர்வே செய்து அனைத்தையும் மின்னிலக்க முறையில் மாற்றி உரிமைதாரர்களின் ஆதர் எண்ணை இணைத்துவிடலாம். ஓவராக குதிரை ஓட்டுவது நல்லதல்ல.
ஆதாரா அப்ப கொள்ளையடித்து பினாமி பெயரில் சொத்து எல்லாம் அவனுக்கே போய்விடும் ஒருத்தர் எத்தனை சொத்து உள்ளது என்று கண்டுபிடிக்க முடியும்.. இதற்கு அரசியல் வியாதிகள் ஒத்துக்கொள்ளுமா. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அதாவது திராவிட ஆட்சிக்கு முன்பு.
வில்லங்க சான்றிதழ் முடிந்த வரைக்கும் நமது பெயரில் சொத்தை மாற்றியது முதல் இருப்பது நலம். இது நிறைய குழப்பங்களை தீர்க்க உதவும்.
வளைகுடா நாடுகளில் உள்ளதை போல, சிஸ்டத்தை மாற்ற வேண்டும். விலைபேசி முடிந்ததும் விற்பவர் சொத்தை, பதிவு துறையிடம் ஒப்படைத்து விடுவார். பதிவுத்துறை, நெம்பருடன் வாங்குபவரிடம் ஒரு பக்க சான்றிதழடுன் ஒப்படைத்து விடும். சான்றிதழில் விற்றவர் பெயரோ, அவரிடம் விற்றவர் பெயரோ, எந்த முன் ஆவணங்களோ (பக்கம் பக்கமாக) இருக்காது. வாரிசுகள் இறந்தவரின் இறப்பு சான்றிதழ் நகலை பதிவுத்துறையில் கொடுத்து, தங்களுக்கான பங்குக்கான சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம். எந்த வில்லங்கங்களும் ஏற்படாது. அதனால், வில்லங்க சான்றிதழ் என்ற சிஸ்டமே இல்லை. EC, பட்டா, கிட்டா, சிட்டா போன்ற வீண் அலைச்சல்களும், லஞ்சம் போன்ற செலவுகளும் இல்லை.