சென்னை: 'தமிழகத்தின் சுற்றுப்புறச் சூழலை அழிக்கும், கேரள அரசை கண்டிப்பதோடு, கடமை தவறும் அனைத்து தமிழக அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்து உள்ளார்.
அவரது அறிக்கை:
கேரள மாநிலத்தில் இருந்து, மருத்துவ, மின்னணு கழிவுகளை, லாரிகளில் எடுத்து வந்து, தமிழகத்தின் எல்லையோர கிராமங்களில், குறிப்பாக நீர் நிலைகளில் கொட்டி வருகின்றனர்.
வேடிக்கை
கேரளாவின் குப்பை தொட்டியாக, தமிழகத்தை மாற்றி வருகிறது. சுற்றுப்புறச் சூழலுக்கு கேடு விளைவிப்பதோடு, தமிழர்களின் உயிரோடு, கேரள கம்யூ., அரசு விளையாடுகிறது. இந்த ஆபத்தான விளையாட்டை, தமிழக அரசும் அமைதியாக வேடிக்கை பார்க்கிறது.
இந்த மாவட்ட எல்லைகளில், சோதனைச் சாவடிகளில் உள்ள அதிகாரிகள், கண்டும் காணாமல் இருப்பது தான், பிரச்னையின் துவக்கம்.
நடவடிக்கை
இந்தக் கழிவுகள் குறித்து, உள்ளாட்சி பிரதிநிதிகள் குரல் எழுப்பாததற்கு ஊழல் தான் காரணம்.
ஒட்டுமொத்த அரசு இயந்திரமே, இந்த முறைகேடில் பங்கு பெற்றுள்ளது. இனியும் அமைதி காக்காமல், தமிழகத்தின் சுற்றுப்புறச் சூழலை அழிக்கும், கேரள அரசை கண்டிப்பதோடு, கடமை தவறும் அனைத்து தமிழக அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது, தமிழக அரசின் கடமை.
இவ்வாறு நாராயணன் திருப்பதி தெரிவித்து உள்ளார்.
வாசகர் கருத்து (4)
சரிங்க .... கேரள பிஜேபி இதைப்பத்தி என்ன சொல்லுது ? இந்த உரிமை கூட எங்களுக்கு இல்லையான்னு கேக்குமே ?
இதையே எத்தனை வருடங்களாக சொல்லி கொண்டு இருப்பீர்கள். அரசு ஒன்றும் செய்யாது. பொதுமக்கள் மட்டுமே தடுக்க முடியும். ஊழல் பெருத்த அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் மாட்டார்கள்.
Oru துண்டுசீட்டு எழுதி போடுவோம் ஐயா
கொள்ளை கூட்ட திராவிடர்கள் இருக்கும் வரை தமிழகம் ஒரு குப்பை தொட்டி தான்....