தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் அக்டோபரில் துவங்கியது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வுப் பகுதியால், வடகிழக்கு பருவமழை தீவிரம் பெற்றது.
வானிலை மாற்றம்
கடந்த ஒரு வாரத்துக்கு முன் வரை, தமிழகத்தின் வடக்கு கடலோர மாவட்டங்கள் உட்பட, பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்தது.
இதையடுத்து, கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக, வடக்கு, மத்திய மற்றும் மேற்கு மாவட்டங்களில் மழை குறைந்து வெப்பநிலை அதிகரித்தது. சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களிலும் வெயிலின் தாக்கமும், இரவு மற்றும் அதிகாலையில் குளிரின் தாக்கமும் அதிகரித்தது.
இந்நிலையில், வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று உருவானது. இது புயலாக வலுப்பெற்று, சென்னை உள்ளிட்ட தமிழக வடக்கு கடலோர பகுதிகளை நெருங்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.
தாழ்வு மண்டலம்
இது குறித்து, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்ட அறிவிப்பு:
வங்கக் கடலில், தெற்கு அந்தமான் அருகில் நேற்று காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
தொடர்ந்து, மேற்கு, வடமேற்கு திசையில், தமிழகம், புதுச்சேரியை நோக்கி நகரும். அதன்பின், நாளை மறுதினம் புயலாக வலுப்பெற்று, தமிழக வட மாவட்டங்கள் மற்றும் அதையொட்டிய பகுதிகளை நெருங்கும்.
மூன்று நாட்கள்
இதன் காரணமாக, நாளை முதல் மூன்று நாட்களுக்கு, தமிழகம், புதுச்சேரியில் அனேக இடங்களில் மிக கன மழை பெய்யும்.
கடலுார், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில், நாளை கன மழை பெய்யும்.
நாளை மறுதினம், கடலுார், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, கள்ளக்குறிச்சி, அரியலுார், பெரம்பலுார், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மிக கன மழை பெய்யும்.
ராணிப்பேட்டை, வேலுார், திருப்பத்துார், திருவண்ணாமலை, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கன மழை பெய்யும். சில இடங்களில் மிக அதிக கன மழை பெய்யும்.
டிச., 9ல், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலுார், திருப்பத்துார், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் மிக கன மழை பெய்யும்.
பரிந்துரை
கள்ளக்குறிச்சி, கடலுார், மயிலாடுதுறை, அரியலுார், பெரம்பலுார், திருச்சி, நாமக்கல், கரூர், ஈரோடு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிதாக உருவாகவிருக்கும் புயலுக்கு, 'மாண்டஸ்' என்ற பெயர் வைக்கப்பட உள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளின் சார்பில், இந்த பெயர் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
மிக கன மழை பெய்யும் மாவட்டங்களுக்கு, வானிலை மையத்தின் குறியீட்டில் ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. புயல் வலுப்பெறும் பட்சத்தில், பல்வேறு இடங்களில் மிக அதிக கன மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது.
அந்தமான் கடல் பகுதியில் இன்று மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். தென் கிழக்கு வங்கக் கடலில், நாளை முதல் இரண்டு நாட்கள்; தென் மேற்கு வங்கக் கடலில் இன்று முதல் மூன்று நாட்கள், சூறாவளி காற்று வீசும்.தமிழகம், புதுச்சேரி மற்றும் ஆந்திராவை ஒட்டிய பகுதிகள், வட இலங்கை பகுதிகளில், 8, 9ம் தேதி சூறாவளி காற்று வீசும். மன்னார் வளைகுடா பகுதியில், நாளை முதல் இரண்டு நாட்கள் சூறாவளி காற்று வீசும். எனவே, மீனவர்கள் மேற்கண்ட தேதிகளில், அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வாசகர் கருத்து (3 + )
இதுக்காக ஸ்டாலினை பதவி விலக கோரி கொஞ்சம் அடிப்பொடிகள் இங்கு கருத்து எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்
இப்போ பழனிசாமி இல்லாதால் நமக்கு சொல்லிக்கொடுத்த பாடம் படி ஸ்டாலினைத்தான் பதவி விலக சொல்லணும் .
(3)
அது தானே …….. சொல்லுவோம்
இதுக்காக ஸ்டாலினை பதவி விலக கோரி கொஞ்சம் அடிப்பொடிகள் இங்கு கருத்து எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்
இப்போ பழனிசாமி இல்லாதால் நமக்கு சொல்லிக்கொடுத்த பாடம் படி ஸ்டாலினைத்தான் பதவி விலக சொல்லணும் .
அது தானே …….. சொல்லுவோம்