டில்லியில் மாநகராட்சி தேர்தல் நேற்று (டிச.,4) நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பா.ஜ., மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே கடும் போட்டி நிலவியது. மொத்தம் உள்ள 250 வார்டுகளுக்கான இந்த தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை டிச.,7ல் நடக்க இருக்கிறது. இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று வெளியானது.
'இந்தியா டுடே
'இந்தியா டுடே' வெளியிட்ட கருத்துக்கணிப்பு முடிவுகளில் மொத்தமுள்ள 250 வார்டுகளில் ஆம்ஆத்மி கட்சி 149 முதல் 171 இடங்களும், பா.ஜ., 69 முதல் 91 இடங்களும், காங்கிரஸ் 3 முதல் 7 இடங்களும், மற்றவை 5 முதல் 7 இடங்களும் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆம்ஆத்மி கட்சி 43 சதவீத ஓட்டுகளையும், பா.ஜ., 35 சதவீத ஓட்டுகளையும், காங்., 10 சதவீத ஓட்டுகளையும் பெறும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக மாநகராட்சியை தன்வசப்படுத்திய பா.ஜ.,விடம் இருந்து ஆம்ஆத்மி கைப்பற்றும் என இந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'டைம்ஸ்நவ் - இடிஜி'
'டைம்ஸ்நவ் - இடிஜி' கருத்துக்கணிப்பில், ஆம்ஆத்மி கட்சி 146 - 156 இடங்களும், பா.ஜ., 84-94 இடங்களும், காங்கிரஸ் 6 - 10 இடங்களும், மற்றவை 4 இடங்கள் வரையும் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (14)
ஹா ஹா ஹா
Delhi people are useless. Supporting this scam Master even after exposed scams. All Christians and Muslims voted for this joker. Delhi people are sales people.
பிஜேபீ தலைநகரத்தையே பிடிக்கமுடியவில்லையே. அவமானம்.
டில்லியில் உள்ள அணைத்து முஸ்லீம், கிறித்துவர்கள் ஆம் ஆத்மிக்கு வோட்டு போடுகிறார்கள். உன்னை போன்று அவர்களுக்கு நம் நாட்டின் மீது பற்று இல்லை, அவர்கள் மதத்தை பரப்புவதையே குறிக்கோளாக கொடுள்ளார்கள் , அதற்க்கு அர்விந்த் கெஜ்ரிவால் 100% உறுதுணையாக இருக்கிறார். டில்லி விளங்கிடும்.
அவனா நீ ??
சென்ற சட்ட மன்ற தேர்தலில் பிஜேபி கட்சிக்கு வெறும் 3 இடங்கள் மட்டுமே கிடைத்தது. மாநகராட்சி தேர்தலில் அதிக அளவில் இடம் கிடைக்கும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. நல்ல முன்னேற்றம். ஆம் ஆத்மி கட்சிக்கு அதிக இடங்கள் கிடைத்து வெற்றி பெற்றாலும் , சட்ட மன்ற தேர்தலில் பெற்ற வெற்றி கிடைக்காது என்று நினைக்கிறேன். சென்ற சட்ட மன்ற தேர்தலில் 70 இடங்களில் 67 இடங்கள் அந்த கட்சிக்கு கிடைத்தது.
தலைநகராவது மதச்சார்பற்று இருக்கட்டும்........வாழ்த்துக்கள்.