Load Image
Advertisement

சும்மா இருக்க ஒரு கோடி சம்பளம்: மனஉளைச்சலால் நீதிமன்றத்தை நாடிய நபர்

Tamil News
ADVERTISEMENT

டப்ளின்: அயர்லாந்தில் வேலையே கொடுக்காமல் 'சும்மா' வந்துசெல்ல ஆண்டுக்கு ரூ.1.03 கோடி சம்பளம் கொடுத்துள்ளதாகவும் இதனால் தனக்கு மனஉளைச்சல் ஏற்படுவதாகவும் ரயில் நிறுவனத்தில் பணியாற்றும் நபர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.


உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இல்லை புலம்புவதையே பலரும் வாடிக்கையாக வைத்திருப்பர். எவ்வளவு வேலை செய்தாலும், சம்பளம் விஷயத்தில் பெரும்பாலான நிறுவனங்கள் ஊழியர்களை திருப்திப்படுத்துவதில்லை. இது இப்படியிருக்க அயர்லாந்தை சேர்ந்த ஒருவருக்கு எந்த வேலையையும் செய்ய விடாமல் 'சும்மாவே' இருக்க வைத்து சம்பளம் கொடுத்திருக்கிறது அவர் பணியாற்றிய ரயில்வே நிர்வாகம். அதுவும் 1.03 கோடி ரூபாயை 'சும்மா' இருந்த நபருக்கு ஊதியமாக கொடுத்துள்ளது.


டெர்மோட் அலஸ்டைர் மில்ஸ் என்பவர் ஐரிஷ் ரயில் நிறுவனத்தில் பைனான்ஸ் மேனேஜராக பணியாற்றி வருகிறார். சுமார் 9 ஆண்டுகளாக இவர் காலை 10 மணிக்கு வேலைக்கு வந்துவிடுவாராம். செய்தித்தாள்களை படித்துவிட்டு, சாண்ட்விச் சாப்பிட்டுவிட்டு வேலையே இல்லாததால் வீட்டிற்கு சென்றுவிடுவாராம். இதற்காக ஓராண்டுக்கு அவருக்கு ரூ.1.03 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. வேலையையே கொடுக்காமல் தினமும் வந்து செல்வதால் தனக்கு மனஉளைச்சல் ஏற்பட்டதாக மில்ஸ், நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
Latest Tamil News

இது தொடர்பாக மில்ஸ் கூறுகையில், 'தினமும் அலுவலகத்திற்கு காலை 10 மணிக்கெல்லாம் சென்றுவிடுவேன். இரு செய்தித்தாள்களையும், சாண்ட்விச் வாங்கிக்கொண்டு அமருவேன். 10:30 மணி வரை செய்தித்தாளை படித்து, சாண்ட்விச் சாப்பிடுவேன். பிறகு எனது கம்ப்யூட்டரை ஆன் செய்து மெயில் வந்திருக்கிறதா என பார்த்து பதிலளிப்பேன். ஆனால் அந்த மெயிலில் வேலை நிமித்தமான எந்த தகவலும் இருக்காது. உடன் பணியாற்றுவோர் பற்றிய எந்த தகவலும் மெயிலில் வராது' எனக் கூறியுள்ளார்.


இப்படியாக சும்மா அலுவலகத்துக்கு சென்று வர 9 ஆண்டுகளாக ஊதியமும் பெற்று வந்திருக்கிறார். இப்படியெல்லாம் நடக்க என்ன காரணம் என கேட்ட போது, கடந்த 2014ம் ஆண்டு தனது அலுவலகத்தில் நடந்த நிதி மோசடியை மில்ஸ் அம்பலப்படுத்தியதால் அவருக்கு கட்டாய விடுப்பு கொடுத்ததோடு, அவருக்கு எந்த வேலையும் கொடுக்காமல் விட்டு வைத்திருக்கிறார்கள்.


இதனால் தன்னுடைய திறமைகள் எதுவும் பயன்படுத்தப்படாமல் மட்டுப்படுத்தப்படுவதாகவும், எந்த பதவி உயர்வும் கொடுக்காமல் வேலையில் வைத்திருப்பதாகவும் குற்றஞ்சாட்டி மில்ஸ் நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்.

இதனையடுத்து “அவர் வேலை செய்யாமல் இருப்பதற்காக மில்ஸை நாங்கள் தண்டிக்கவேயில்லை” என நிறுவனம் தரப்பில் விளக்கமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் வழக்கின் அடுத்த விசாரணையை பிப்ரவரி மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
news promo

அனைத்து வசதிகள் கொண்ட உலகளாவிய சந்தையில் சொந்த கடை 50 லட்சம் முதல்!வாசகர் கருத்து (18)

 • தமிழன் - கோவை,இந்தியா

  அடப்பாவமே டேய் அந்த தங்கத்தை செல்லத்தை அப்படியே இங்கு தூக்கிட்டு வாங்கடா இந்த செல்லத்துக்கு இந்தியாவ பத்தி தெரியாது போல இங்க 99.99% கேடுகெட்டதுகள் அரசாங்க உத்தியோகத்தில் இருந்து கொண்டு இதைத்தான் சரியாக பல தலைமுறைகளாக அரசு சம்பளத்தில் செய்யிதுகள்

 • Ravichandran Ganesan -

  நான் வேலை பார்த்த அலுவலகத்தில் இப்படித்தான் ஒரு சக ஊழியர் ஒரு வேலையை செய்ய சொன்னபோது அது என் வேலை இல்லை என்றார். பிறகு நிர்வாகம் அவருக்கு எந்த வேலையும் தரவில்லை. அந்த நபரால் 15 நாட்கள் கூட தாக்கு பிடிக்க முடியவில்லை. அவரே நிர்வாகத்திடம் கெஞ்சி மன்னிப்பு கேட்டார். அவர் ஒரு திறமையான ஊழியர் தான். அதனால் சும்மா உட்கார முடியவில்லை.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  தீயாக வேலை செய்தால் இப்படித்தான் ஆகும்...

 • T.Senthilsigamani - Srivilliputtur,இந்தியா

  நேர்மையாளர்

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  அதுபோன்ற வேலைக்காக காத்திருக்கிறேன் ப்ரோ. நீங்களானா இப்படி..

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

ஸ்ரீபெரும்புதூரில் சொந்த மனை வாங்க சரியான நேரம் வந்தாச்சு!

Advertisement
 
Advertisement