ஆமதாபாத்: குஜராத் 2ம் கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவில் பிரதமர் மோடி தனது ஓட்டை ஒரு பள்ளியில் உள்ள சாவடியில் பதிவு செய்தார். ஓட்டுப்போட வந்த பிரதமருக்கு ஆமதாபாத் மக்கள் சிறப்பான வரவேற்பை அளித்தனர். மாலை 5 மணியுடன் ஓட்டுப்பதிவு நிறைவடைந்தது.
நடந்து சென்று மக்களிடம் கையசைத்தார்

இன்று காலை 9 மணிக்கு கவர்னர் மாளிகையில் இருந்து ஓட்டுப்போட பலத்த பாதுகாப்புடன் புறப்பட்டு சென்றார் மோடி. இவரது வருகையை முன்னிட்டு சாலைகளின் இருபுறமும் திரளாக நின்ற பொதுமக்கள் மோடியை கையசைத்து வரவேற்றனர். நீண்ட தூரம் நடந்தபடி ஓட்டுச்சாவடிக்கு சென்றார். மக்களைப் பார்த்து கையை உயர்த்தி காட்டினார். பல்வேறு இடங்களில் மேள, தாளம் அடித்தபடி பா.ஜ., தொண்டர்கள் ஆடி மகிழ்ந்தனர்.
ஆமதாபாத்தில் உள்ள ரானிப் என்ற பகுதியில் உள்ள நிஷான் பள்ளியில் பிரதமர் ஓட்டளித்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அவரது மகனும் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவருமான ஜெய் ஷா ஆகியோர் ஆமதாபாத்தில் உள்ள நரன்புரா ஓட்டுச்சாவடியில் தங்களது ஓட்டினை பதிவு செய்தனர். பிரதமர் மோடியின் தாயார், காந்திநகரில் உள்ள ராய்சன் பிரைமரி பள்ளி ஓட்டுச்சாவடியில் தனது ஓட்டினை பதிவு செய்தார்.

ஓட்டளியுங்கள்: மோடி வேண்டுகோள்
முன்னதாக பிரதமர் வெளிட்ட செய்திக் குறிப்பில்: குஜராத் 2ம் கட்ட தேர்தலில் மக்கள் திரளாக ஓட்டளிக்க வேண்டும் குறிப்பாக பெண்கள், இளம் வாக்காளர்கள் அவசியம் ஓட்டளித்து ஜனநாயக கடமையை நிறைவேற்றுங்கள் என வலியுறுத்தி உள்ளார்.
ஓட்டளித்தப்பின் பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் கூறுகையில், 'குஜராத், ஹிமாச்சல பிரதேசம் மற்றும் டில்லி மக்களால் தேர்தல், ஜனநாயக திருவிழா போல் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் ஆர்வமுடன் ஓட்டளிக்கும் அனைத்து வாக்காளர்களுக்கும் எனது பாராட்டுகள். இந்த தேர்தலை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மிகச் சிறப்பாகவும், அமைதியாகவும் நடத்தி வருகிறது' என்றார்.
ஓட்டுப்பதிவு நிறைவு:
93 தொகுதிகளுக்கான 2ம் கட்ட தேர்தலின் ஓட்டுப்பதிவு மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. 5 மணி நிலவரப்படி 58.68 சதவீதம் ஓட்டுகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாசகர் கருத்து (24)
Rafi என்னும் அறிவுஜீவியே அது காங்கிரஸ் கொடி இல்ல இந்திய தேசிய கொடி உனக்கு மோடி எதிர்பு என டிசைனில் இருப்பதால் வித்தியாசம் தெரியவில்லை
.இந்த வரவேற்பு ,கூட்டம், தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது .
எல்லோரும் தவறாமல் வாக்களிக்கும் படி கேட்டு கொண்டும் 58 சதவிகிதத்தை தாண்டவில்லை என்பதை இவர் மீது அம்மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை அவ்வளவுதான். இவர் கட்சினரிடம் மட்டும் பல கோடிகள் பிடிபடுகின்றது. விலைக்கு வாங்க அனைத்தும் ஏற்பாடாகி இருப்பது விரைவில் தெரியவரும். தேர்தலில் நடக்கும் மோசடிகள் வெளியாகி கொண்டிருப்பதும் ஜனநாயகத்தை இவர்கள் குழி தோண்டி புதைக்க எடுத்து வைக்கும் ஓவ்வொரு அடிகளும் ஆதாரங்களுடன் வெளியாகி கொண்டிருக்கு.
இப்படியே புலம்பிக் கொண்டே காலத்தை தள்ளுவதுதான் ஒரே வழி.
இங்கே தலைப்புக்கும், காட்சிக்கும் வேறுபாட்டை பார்க்கலாம், உற்சாக வரவேற்பு, காட்சியில் காங்கிரஸ் கொடியுடன் மக்கள் நிற்பது புலனாகின்றது. என்ன செய்வது அரசியலில் குற்றவாளிகள் நிரம்பி இருப்பதால் விலை போவதும் அடுத்த குற்றவாளி அரவணைப்பதும் ஜனநாயக கொலை அகங்காரத்துடன் அரங்கேறுவதை நினைத்து அமைதி காக்கும் மக்கள் புலம்பி கொண்டே போகமுடியாது, மக்கள் விழிப்படையும் போது குற்றவாளிகள் நிலை படு கேவலம்மாக இருக்கும். நன்றி தோழா
நான் குஜராத்தில் பணியில் இருப்பதால் இங்கு நடக்கும் அரசியல் நிலவரங்கள் நன்றாகவே தெரியும்.அதனால் என் கணிப்பு படி இமாச்சல பிரதேசத்தில் மொத்தம் உள்ள 68 தொகுதிகளில் மெஜாரிட்டி பெறுவதற்கு 35 தொகுதிகள் தேவை.
மோடிஜி ஒரு இந்தியக்குடிமகன்,அப்புறம் நம் நாட்டின் பிரதமர் . அவர் ஓட்டுப் போட்டதை ஏன் இவ்வளவு விளம்பரம் செய்ய வேண்டும் ???அவர் கை அசைத்தார் ,ஓட்டுப் போட்ட மையைக் கைவிரல்களில் காட்டினார்,மக்களை பார்த்து புன்னகை பூத்தார் என்று செய்திகளை பெரிது படுத்திப் போடுகின்றனர் ஏன் என்று புரியவில்லை ஜி.எஸ்.ராஜன் சென்னை