அம்மா உணவக ஊழியர்கள் 130 பேருக்கு கல்தா: நஷ்டத்தை சரிக்கட்டுவதாக அதிகாரிகள் விளக்கம்

அரசு மருத்துவமனைகள் உட்பட, 407 இடங்களில் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டன. காலையில், இட்லி 1 ரூபாய், பொங்கல் 5 ரூபாய்; மதியம் சாம்பார், கறிவேப்பிலை, எலுமிச்சை சாதம் தலா 5 ரூபாய், தயிர் சாதம் 3 ரூபாய் மற்றும் இரவு இரண்டு சப்பாத்தி 3 ரூபாய்க்கு வழங்கப்படுகின்றன.
ஏழை மக்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அம்மா உணவகம் இருக்கிறது. கொரோனா காலத்தில் பசியைப் போக்கும் இடமாக விளங்கியது. தினமும் 150 முதல் 5,000 ரூபாய் வரை, ஒரு உணவகத்தில் விற்பனையாகிறது. மொத்தம், 4,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
மாதம் 15 லட்சம் ரூபாய் வரை விற்பனையானாலும், 10 கோடி ரூபாய் வரை செலவாகிறது. லாப நோக்கம் இல்லாமல், நஷ்டம் என தெரிந்தே ஒரு திட்டமாக அறிவிக்கப்பட்ட இது, பொதுமக்களிடம் அமோக வரவேற்பை பெற்றதால், தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் நீர்நிலை, மெட்ரோ ரயில் நிலையம், வடிகால் மீது கட்டப்பட்டது என, ஏழு அம்மா உணவகங்கள் மூடப்பட்டன. தற்போது, 400 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இட்லி, பொங்கல், சப்பாத்தி போன்றவற்றை தனியார் ஹோட்டல்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாகவும், இதனால் அம்மா உணவகத்தை நம்பி உள்ளவர்கள் ஏமாற்றம் அடைவதாகவும் கூறப்படுகிறது.
இதன்படி ஆண்டுதோறும் 120 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்குகிறது. தற்போது வரை 756 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக, கணக்கு நிலைக்குழு தலைவர் தனசேகரன் சமீபத்தில் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் கூறினார்.

மேலும், 500 ரூபாய்க்கு கீழ் விற்பனையாகும் அம்மா உணவகங்களை மூடி, அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு மாற்றுப் பணி வழங்க வேண்டும் எனவும் தி.மு.க., கவுன்சிலர்கள் கூறினர்.
ஏற்கனவே நிதிச்சுமையில் தள்ளாடும் மாநகராட்சிக்கு, அம்மா உணவக செலவை அரசு வழங்க வேண்டுமென கோரிக்கையும் வைக்கப்பட்டு உள்ளது.
கொரோனா காலத்தில் இலவச உணவு வழங்கப்பட்ட போது, அரசு நிதி உதவி செய்தது. இதர காலங்களில் ஏற்பட்ட அனைத்து செலவுகளும், மாநகராட்சி வரியில் இருந்து செய்யப்படுகின்றன.
அம்மா உணவக ஊழியர்களுக்கு தினமும் 300 ரூபாய் வீதம், மாதம் 9,000 ஊதியம் வழங்கப்பட்டது. செலவை குறைக்க, ஊழியர்களை நீக்கம் செய்யும் முடிவுக்கு எதிர்ப்பு எழுந்ததால், சுழற்சி முறையில் வார விடுமுறை அளிக்கப்படுகிறது. மாத விற்பனையை பொறுத்து, நான்கு முதல் 14 பேர் என்ற அடிப்படையில் ஊழியர்கள் உள்ளனர். இவர்களில், 60 முதல் 75 வயதுக்கு உட்பட்ட ஊழியர்களும் இருந்தனர்.
இந்நிலையில், 60 வயதுக்கும் மேற்பட்ட 130 பேரை, எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், 1ம் தேதி நீக்கம் செய்யப்பட்டனர். இதில், அதிக ஊழியர்களை நீக்கிய மண்டலமாக அம்பத்துார், ராயபுரம் உள்ளது.
இதனால், இவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதுடன், குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கி நீக்கம் செய்திருக்கலாம் என கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால், இவர்களுக்கு மாற்றுப் பணி வழங்க முடியுமா என, இதர துறைகளுடன் ஆலோசித்து வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பணி நீக்கம் செய்ததற்கான எந்தவித முன்னறிவிப்பும் செய்யவில்லை. 1ம் தேதி வேலைக்கு வந்த போது தான், இவர்கள் நீக்கம் செய்யப்பட்ட விபரம் தெரிந்தது. விசாரித்த போது, உயரதிகாரிகள் வாய்மொழி உத்தரவில் நீக்கம் செய்ததாக, மண்டல அதிகாரிகள் கூறினர். கணவன், பிள்ளைகள் கைவிட்டாலும், இத்தனை ஆண்டுகள் இந்த உணவகத்தை நம்பி, சொந்த காலில் வாழ்ந்து வந்தோம். பிள்ளைகள் திருமணம், பேரப் பிள்ளைகள் உயர் கல்விக்கு உதவியாக இருந்தது. அதிகாரிகள் மனது வைத்து, மீண்டும் நியமிக்க வேண்டும்.
- நீக்கப்பட்ட ஊழியர்கள்
அம்மா உணவக செயல்பாட்டில், எந்த குறையும் வைக்கவில்லை. உணவின் தரத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. உணவுகளை அதிக விலைக்கு ஹோட்டல்களுக்கு விற்பது, பொருட்களை திருடியது போன்ற குற்றச்சாட்டுகள் மீது தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். தவறு செய்த ஊழியர்களை நீக்கம் செய்துள்ளோம். ஏற்கனவே நஷ்டத்தில் இயங்குகிறது. செலவை குறைக்க, தவிர்க்க முடியாத நடவடிக்கையாக, 60 வயதுக்கு மேற்பட்டோர் நீக்கம் செய்யப்பட்டனர். முதியவர்களாக இருப்பதால், மாற்றுப் பணி வழங்க முடியுமா என, இதர துறைகளுடன் ஆலோசித்து வருகிறோம்.
- மாநகராட்சி அதிகாரிகள்
தி.மு.க., கவுன்சிலர்கள் காரணமா?
அம்மா உணவகம் துவங்கும் போது, அப்போதைய அ.தி.மு.க., கவுன்சிலர்கள் பரிந்துரையில் நியமிக்கப்பட்ட ஊழியர்கள் தான் தற்போதும் உள்ளனர். இதில், சில ஊழியர்களிடம், ஒரு மாத ஊதியம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் பெற்றனர்.தற்போது, இவர்களை நீக்கிவிட்டு, நாங்கள் பரிந்துரைக்கும் ஊழியர்களை நியமிக்க வேண்டும் என, சில தி.மு.க., கவுன்சிலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக, 130 பேர் நீக்கப்பட்டனரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஊழியர்கள் நியமனம்
மாத விற்பனை ஊழியர்கள் எண்ணிக்கை20 ஆயிரம் ரூபாய் வரை 621 முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை 880 ஆயிரம் ரூபாய் வரை 101.20 லட்சம் ரூபாய் வரை 121.60 லட்சம் ரூபாய் வரை 14சமையல் இல்லாத உணவகங்களில் 4
வாசகர் கருத்து (20)
இங்க ஒரு ஓட்டை விழுந்த boat முழுகபோகிறது... boat boatu
வோட்டு போட்டார்களே அனுபவிக்கட்டும். வரும் தேர்தலில் நாற்பத்தையும் அனுப்பி வையுங்கள்
இந்த அரசுக்கு கல்தா குடுத்தா எல்லா நஷ்டத்தையும் ஈடு கட்டலாம் .
ஏழையின் சிரிப்பில் இறைவனை காணும் அரசு அவர்களை கண்ணீர் கடலில் தள்ளுகிறது.
நஷ்டத்தை சரிகட்டத்தானே? அப்போ சரி விரைவில் பால்வளத்துறை, மின்வாரியம், போக்குவரத்துத்துறை, போன்ற மற்ற நஷ்டத்தில் இயங்கும் இடங்களிலும் கல்தா இருக்கிறது என புரிந்துக் கொள்ளலாம். தமிழக அரசு 6 இலட்சம் கோடி கடனில் நஷ்டத்தில் தான் நடைபெற்றுக்கொண்டிருக்கிறதுஎன்ன செய்யப்போகிறார்களோ ?
அம்மா உணவகம் என்பது லாபத்திற்க்காக ,உருவாக்கப்படவில்லை, ஜெயா அவர்களால் ஏழை, எளிய அந்நாடும் வேலை செய்து பிழைப்பவர்களக்கா, இரண்டு வே லையும் சுமார், இருபபது,ரூபாயில்,உணவு கிடைக்க செய்த ஏற்பாடு அதை இந்த ஆட்சி ,பதவிக்கு வந்தநாளிரிருந்து படிப்படியாக,அழிக்கமுயற்சிக்கிறதுஒரே காரணம், அம்மாவால் உருவாக்க பட்டது. அரசாங்கத்தின் எந்த நிறுவனம், லாபத்தில் ஓடுகிறது டாஸ்மாக்கை தவிர? மனசாட்ச்சியே இல்லை. என்ன வேடனை என்றால், சமூக நீதி என்று பேருபவர்கள் இவ்வாறு செய்வது? கம்யூனிஸ்ட் போன்ற இடது சாரி காய்ச்சிகழும், சும்மா இருக்கிறது கவலையாக இருக்கிறது? நாடு எங்கே போகிறது ?