பத்திர பதிவுக்கு ஆதார் சரிபார்ப்பு; நடைமுறையில் வருகிறது மாற்றம்
சென்னை : பத்திர பதிவின்போது மேற்கொள்ளப்படும், ஆதார் எண் சரிபார்ப்புக்கான நடைமுறை, விரைவில் மாற்றப்பட உள்ளது.
தமிழகத்தில், பத்திர பதிவுக்கு விண்ணப்பிப்போர், தங்களின் அடையாள சான்றுகளை தாக்கல் செய்ய வேண்டும். தற்போது, 'ஆதார்' எண் பயன்பாடு அதிகரித்து உள்ளது. இதற்காக, ஆன்லைன் பத்திர பதிவுக்கான, 'ஸ்டார் 2.0' சாப்ட்வேரில் பிரத்யேக வசதி செய்யப்பட்டது.
அனைத்து சார் - பதிவாளர் அலுவலகத்திலும், இந்த வசதியை பயன்படுத்த, பதிவுத்துறை ஏற்பாடுகளை படிப்படியாக செய்து வருகிறது. சொத்து வாங்குவோர், விற்பவர்கள் நிலையில் ஆள்மாறாட்டத்தை தடுக்க, இந்த வசதி பேருதவியாக உள்ளது. இதில், சில மாற்றங்கள் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
சார் - பதிவாளர்கள் கூறியதாவது: ஆன்லைன் பத்திர பதிவுக்கான இணையதளத்திலேயே, ஆதார் சரிபார்ப்பு வசதி உள்ளது. இதை பயன்படுத்தும் போது, கணினியின் வேகம் குறைவதால் பத்திர பதிவு தாமதமாகிறது.
இதனால், அதிக பத்திரங்கள் பதிவாகும் அலுவலகங்களில், இந்த வசதியை பயன்படுத்துவது தவிர்க்கப்படுகிறது. இது மோசடி பத்திரங்கள் அதிகரிக்க வழிவகுக்கும். எனவே, ஆதார் எண் சரி பார்ப்புக்கான வசதியை, துறையின் பிரதான இணையதளத்தில் நேரடியாக பயன்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்த பரிந்துரைகள், உயர் அதிகாரிகளின் பரிசீலனையில் உள்ளது. விரைவில், இது தொடர்பான நடவடிக்கைகள் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
என்னதான் மாற்றங்களை கொண்டு வந்தாலும் bribe ஒழிக்க முடியுமா???