உள்ளாட்சிகளில் பணியாளர்கள் குறைப்பு நடவடிக்கை: அவுட்சோர்சிங் அமலாவதால் ஊழியர்கள் அதிர்ச்சி
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் கடந்த 10 ஆண்டுகளில் கம்ப்யூட்டர் பயன்பாடு அறிமுகம் செய்யப்பட்டு, கோப்பு நிர்வகிக்கும் முறைகள் 'டிஜிட்டல்' நடைமுறைகளாக மாற்றப்பட்டன.
எனவே தேவையில்லாத பணியாளர்களை வீட்டுக்கு அனுப்ப அரசு திட்டமிட்டுள்ளது. அத்துடன் செலவினங்கள் 49 சதவீதத்திற்கு மிகாமல் இருக்கவும், தேவையான நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி அரசாணை 152 பிறப்பிக்கபபட்டுள்ளது. இந்த அரசாணை மாநகராட்சிகளுக்கு மட்டும் பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அரசாணையின்படி மாநகராட்சிகளில் 'சி', 'டி' பிரிவு பணியிடங்களை காலி செய்ய வழி வகை செய்யப்பட்டுள்ளது.
அதாவது துப்புரவு பணியாளர்கள், பியூன்கள், பில் கலெக்டர்கள் வரை பணியிடங்கள் காலி செய்யப்படுகின்றன.
தற்போது பணியில் உள்ளவர்கள் பணி ஒய்வு பெறும் போது, மீண்டும் அந்த இடம் நிரப்பப்பட மாட்டாது.
அதற்கு பதில் 'அவுட்சோர்சிங்' முறையில் நிரப்பப்படும். பேரூராட்சிகளுக்கு அரசாணை எண் 139 பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி துப்புரவு பணியாளர்கள், தெருவிளக்கு பராமரிப்பு, குடிநீர் வினியோகம் உள்ளிட்ட ஏறக்குறைய செயல் அலுவலர் தவிர்த்து பிற பணியிடங்கள் அனைத்தும் தனியாரிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதே நடைமுறையை நகராட்சிகளிலும் அமல்படுத்த அரசு தயாராகி வருகிறது.
இதன் மூலம் உள்ளாட்சி அமைப்புகளில் 30 சதவீத பணியிடங்கள் காலியாகின்றன.
அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்கள் அதிர்ச்சி அடைந்தது மட்டும் இன்றி, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!