ADVERTISEMENT
மாவட்டம் முழுவதும் இணைய வழி குற்றங்கள் அதிகரித்து வருகிறது.முகம் தெரியாத மர்ம நபர்கள் செல்போன் பயன்படுத்துவோரின் செல்போனுக்கு இணைய லிங்க் அனுப்பி தங்களுக்கு பணம் பரிசாக கிடைத்திருப்பதாக மக்களின் ஆசையை துாண்டுகின்றனர்.இதை தொடர்ந்து வாடிக்கை யாளர்களின் வங்கி விபரங்களை பெற்றுகொண்டு அதிலிருந்து பணத்தை திருடுகின்றனர்.
தொடரும் இப்பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதோடு மட்டுமின்றி சில குற்றவாளிகள் குறிவைத்து பெண்களை சுற்றிவளைப்பதும் வாடிக்கையாகி விட்டது.சைபர் காவலர்களிடம் புகார்கள் குவிந்தவண்ணாமாக இருக்கிறது. போலீசாரும் மக்கள் பறிகொடுத்த பணத்தை மீட்டு உரியவர்களிடம் ஒப்படை க்கின்றனர்.
இருந்த போதிலும் அவர்களால் குற்றவாளிகளை பிடிக்க முடியாததால் குற்றவாளிகளும் தைரியமாக சுற்றுகின்றனர். அது மட்டுமின்றி துணிச்சலாக மற்றவர்களிடமும் மோசடியில் ஈடுபடுகின்றனர்.போலீசார் இணைய குற்றங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற போதிலும் இந்நிலை தொடர்கிறது.
குற்றவாளிகள் பெரிய அளவில் ஆயிரக்கணக்கில் திருடுவதால் பாதிக்கப்பட்டவர்களும் புகாரளிக்க வர மறுக்கின்றனர்.போலீசார் இணை ய குற்றங்களிலிருந்து காப்பாற்ற தனிப்படை அமை த்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!