மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள இந்துாரில் அரசு சட்டக் கல்லுாரி அமைந்துள்ளது. ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் மாணவர் பிரிவான, ஏ.பி.வி.பி., சார்பில், கல்லுாரி முதல்வரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு ஹிந்து ஆசிரியர்கள் அலட்சியப் போக்குடன் இருப்பதுடன் அரசுக்கு எதிரான கருத்துக்களை மாணவர்களிடையே பரப்பி வருகின்றனர்.'லவ் ஜிஹாத்' பரப்புவதுடன், அசைவ உணவுகளுக்கு ஆதரவாகவும் இவர்கள் பேசி வருகின்றனர். இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, அந்த ஆசிரியர்கள் ஐந்து நாட்களுக்கு பாடங்கள் நடத்துவதற்கு, கல்லுாரி முதல்வர் இமானுர் ரஹ்மான் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (14)
நடந்ததா இல்லையா என்பதே முக்கியம் இதுபோன்ற தேச விரோத எண்ணம் கொண்டவர்களை சவூதி அரேபியாவிற்கே விரட்டி அடிக்க வேண்டும்
இங்கும் இதெல்லாம் காலகாலமாய் நடந்து வருகிறது. பால் பவுடருக்கும், ஹாஸ்டல் ரூமிற்கும், பிச்சை காசிற்கும் அந்நாளிலிருந்தே மதம் மாறுவது நடந்து கொண்டுதானிருக்கிறது.
தமிழ்நாட்டிலும் இதுபோன்று நடந்தாலும் அரசின் ஆதாரவோடு நடப்பதால் யாரும் எதுவும் செய்யமுடிவதில்லை
தமிழகத்தில் மதம் மாறிய கிறித்தவ ஆசிரியைகள் பாடம் நடத்துவதை விட கிறித்தவ மத போதனைகளை அதிகமாக செய்து மூளை சலவை செய்கிறார்கள்... அதுவும் அரசு ஊதியத்தில்....
நான் பள்ளியில் படித்துக்கொண்டு இருந்த காலத்தில், கோவையில் அரசு உதவிபெறும் தனியார் பள்ளியில், கிறிஸ்தவர் ஒருவர் தலைமை ஆசிரியராக வந்தார்.
மதம் என்ற வார்த்தை சமீப காலமாக அதிகம் பேச படுகிறது. அணைத்து மதவாத குழுக்களையும் கட்சிகளையும் தமிழ்நாட்டு மக்கள் புறக்கணிக்க வேண்டும். இல்லயென்றால் இங்கேயும் உபி / மபி / ராஜஸ்தான் போல் ஆக்கிவிடுவார்கள்.....
... கல்வி அதல பாதாளத்திற்கு சென்றாகிவிட்டது. முதல் பத்துக்குள் இருந்த அண்ணா யூனிவர்சிட்டி, தற்போது, 17-ம் இடத்தில், Air Traffic-இல் 3-ம் இடத்தில் இருந்த சென்னை இன்று ஆறாமிடத்தில். குண்டுசட்டியில் குதிரை ஓட்டுபவர்களுக்கு ஹைதராபாதும், பெங்களூருவும், புனேவும், அகமதாபாதும் இன்று அடைந்துள்ள வளர்ச்சி குறித்து தெரியுமா? நாறும் சென்னையை சிங்கார சென்னை என இன்னமும் அழைக்கும் கிணற்று தவளைகள் இந்த இழி நிலையையும் கொண்டாடத்தானே செய்வார்கள்?
மற்ற மாநிலத்தை அப்புறம் பார்க்கலாம்.
கதறல் பலமாக இருக்கிறது
இப்போது இந்த பிஜேபி மாணவர்களின் குற்றச்சாட்டிற்கு இது போன்ற காட்சிகளை வெளி கொண்டுவந்து நடவடிக்கை எடுக்கலாம். வெறும் குற்ற சாட்டின் பேரில் நிறுத்தி வாய்ப்பு என்பதே அரசின் அடக்கு முறைக்கு கல்லூரி நிர்வாகம் அடிபணித்திருக்கு. குற்ற சாட்டின் வீரியத்தை வலுப்படுத்த இல்லாத ஒரு லவ் ஜிகாத், ராணுவத்திற்கு எதிராக என்று குற்றசாட்டு என்று வரிசை படுத்தி இருக்கின்றார்கள்...