ADVERTISEMENT
சேதுக்கரை---ராமநாதபுரம் அருகே புனித ஆன்மிக ஸ்தலமாக சேதுக்கரை சேது பந்தன ஜெய வீரஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இங்கு கடலில் புனித நீராட ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். வாகனங்கள் நிறுத்த போதிய வசதி இல்லாத நிலையில் அடாவடியாக கட்டணம் வசூலிக்கின்றனர். இந்த வேகம் கழிப்பறை, உடைமாற்றும் அறை என அடிப்படை வசதிகள் செய்து தருவதில் இல்லை, என பக்தர்கள் புகார் கூறுகின்றனர்.
சேதுக்கரை மன்னார் வளைகுடா கடற்கரையோரத்தில் சேது பந்தன ஜெய வீர ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி, பித்ருக்கடன் உள்ளிட்ட சங்கல்ப பூஜைகளை செய்கின்றனர். உள்ளூர் மட்டுமின்றி, வெளிமாநில, மாவட்ட பக்தர்கள் குவிகின்றனர்.
சேதுக்கரை ஊராட்சி சார்பில் ஒப்பந்த அடிப்படையில் தனியார் டூவீலர் ரூ.15, ஆட்டோ ரூ.30, கார் ரூ. 60, வேன் ரூ. 90, பஸ் ரூ.120 என கட்டணம் வசூல் செய்கின்றனர். மாற்ற கோயில்களை விட சேதுக்கரையில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பா.ஜ., மத்திய அரசின் நலத்திட்ட மாநில செயலாளர் கே.ராமச்சந்திரன் கூறியதாவது:
சேதுக்கரை கடற்கரைக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு பார்க்கிங் வசதி முறையாக இல்லை. பக்தர்களிடம் வசூல் செய்வதிலேயே குறியாக உள்ளனர். ஆனால் கழிப்பறை, குடிநீர் வசதிகள் செய்துதரவில்லை. தை, ஆடி, மகாளய அமாவாசை தினங் களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
அச்சமயத்தில் 2 கி.மீ., முன்னதாக வெள்ளை பிள்ளையார் கோயில் அருகே வாகனங்கள் நிறுத்தப்பட்டு பார்க்கிங் கட்டணம் வசூல் செய்கின்றனர். திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் கோயிலில் ஆட்டோ டூவீலர் கட்டணமில்லை, மற்ற அனைத்து வாகனங்களுக்கும் ரூ. 35 மட்டுமே வசூலிக்கப்படுகிறது.
உடைமாற்றும் அறையை நிரந்தரமாக திறக்க வேண்டும். பார்க்கிங் கட்டணத்தை குறைக்க ஊராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும், என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
உலகத்தர வசதிகள் வேணும்னா உலகத்தரத்தில் கட்டணம் வசூலிக்கணும். உலகத்தர கட்டணம் வசூலிக்கணும்னா உலகத்தரத்தில் சம்பாத்தியம் வரணும். இந்தியா பொருளாதாரத்தில் ஐந்தாமிடத்தில் இருந்தாலும், தனி நபர் வருமானம் மிக மிகக் குறைவு. நம்மாளுங்க குடுக்கற கட்டணங்களுக்கு இந்த வசதிதான் கிடைக்கும்.