Load Image
Advertisement

சபரிமலை மேல்சாந்தி தேர்வு நடைமுறையை மாற்ற முடியாது: ஐகோர்ட்டில் தேவசம்போர்டு வாதம்

 சபரிமலை மேல்சாந்தி தேர்வு நடைமுறையை மாற்ற முடியாது: ஐகோர்ட்டில் தேவசம்போர்டு வாதம்
ADVERTISEMENT
சபரிமலை: சபரிமலை மேல்சாந்தி தேர்வில் ஆண்டாண்டு காலமாக இருந்து வரும் நடைமுறையை மாற்ற முடியாது என்று கேரள ஐகோர்ட்டில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.

சபரிமலை மேல்சாந்தி தேர்வுக்கு மலையாள பிராமணர் சமுதாயத்தை சேர்ந்தவர்களை மட்டுமே அழைப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சபரிமலை டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், 'இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள சமஉரிமைக்கு எதிரானது. ஒரு வகை தீண்டாமை' என்றும் வாதிட்டனர்.

ஆனால் தேவசம்போர்டு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், 'இது புராதன காலம் முதல் இருந்து வரும் நடைமுறை என்பதால் இதை மாற்ற முடியாது' என்று தெரிவித்தனர். சபரிமலை மேல்சாந்தி என்பது ஒரு பொதுவான நிரந்தர பதவி அல்ல. ஒரு சமுதாயத்தை சேர்ந்த அனுபவமுள்ள பூஜாரிகளிடம் இருந்து விண்ணப்பம் பெறுவது என்பது ஆண்டாண்டு காலமாக இருந்து வரும் நடை முறை என்றும் குறிப்பிட்டனர்.

Latest Tamil News
ஆண்டாண்டு காலமாக பிராமணர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே சபரிமலைமேல்சாந்தியாக நியமிக்கப்பட்டுள்ளதற்கு ஏதாவது ஆதாரம் உள்ளதா என்று நீதிபதிகள் கேட்ட போது, 'இது தவறு என்றால் அதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு மனுதாரருக்குதான் உள்ளது' என்று தேவசம்போர்டு வழக்கறிஞர் கூறினார்.

இந்த பாகுபாட்டை மாற்றி தகுதி உடைய எவரும் மேல்சாந்திக்கு விண்ணப்பிக்கலாம் என்ற நடைமுறை வரவேண்டும் என்று மனுதாரர் தரப்பில் வாதிக்கப்பட்டது. பின்னர் இறுதி வாதத்துக்காக டிச. 17க்கு வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.


வாசகர் கருத்து (6)

  • ANANTHAKRISHNAN - Ranipet,இந்தியா

    மாலை போட்டோமா, விரதம் இருந்தோமா, மாதா, பிதா, குரு இவர்களின் வழிகாட்டுதலின்படி காடு, மலை 18 படிகளை கடந்து எல்லாம் வல்ல ஐயப்பனை மனம் குளிர பேரானந்தமாய் தரிசித்து விட்டு வீடு வந்து சேர்ந்தோமானு இல்லாம ஆகம விதிகளிலும் உங்க வெங்காய குசும்பு போகல இந்த மனுதானுதாரருக்கு போய்ட்டு சோலிய பாருங்கய்யா மனுதாரரே

  • Kumar - Madurai,இந்தியா

    சம உரிமையா?அப்ப எதற்கு இடஒதுக்கீடு. குறிப்பிட்ட மதததலைவர்கள் திருமணம் செய்வதில்லை.அப்ப‌ அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பார்களா?

  • அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா

    கொலீஜியம் சிஸ்டம் சரியென்றால் இதுவும் சரியே. எத்தனையோ நாட்டாமைகளுக்கு நீதி சொல்லும் திறமை இருக்கு. ஏன் கூப்பிடுவதில்லை?

  • தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா

    " உடல் உறுப்பு மட்டும் என்னுடையது -உள்ளே இருந்து வேலை பார்த்தது வேற ஓருவர் என்கிற பழமொழி போல் உள்ளது...

  • DUBAI- Kovai Kalyana Raman - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    யார் அந்த மனுதாரர், கிறிஸ்டின், முஸ்லீம் அல்லது கம்யூனிஸ்ட்? தயவு செய்து மனுதாரர் பெயரை போடவும் ..

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்