புத்தாண்டில் ஓட தயாராகிறது தென்னிந்தியாவின் இரண்டாவது வந்தேபாரத் ரயில்
அமராவதி : தென்னிந்தியாவின் இரண்டவாது வந்தே பாரத் ரயில் வரும் புத்தாண்டு முதல் செகந்திரபாத் -விஜயவாடா இடையே ஓட தயாரகிறது.
சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எப் ( இண்டக்ரல் கோச் பேக்டரி) சார்பில் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் வந்தே பாரத் ரயில் தயாரிக்கப்பட்டு வருகிறது
முதல் சேவை புதுடில்லி - வாரணாசி இடையே கடந்த 2019ம் ஆண்டு பிப்.,15-ல் துவங்கியது. இதையடுத்து, புதுடில்லி - -ஜம்மு காஷ்மீர், மும்பை - காந்தி நகர், புதுடில்லி - ஹிமாச்சல பிரதேசத்தின் உனா என நான்குவழித்தடங்களில் இந்த ரயில்கள் இயக்கப்படுகின்றன.
ஐந்தாவது வழித்தடமாக தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில் கடந்த மாதம் சென்னை மற்றும் மைசூரு இடையே பிரதமரால் துவக்கி வைக்கப்பட்டது. தற்போது தென்னிந்தியாவின் இரண்டாவது வந்தே பாரத் ரயில் செகந்திராபாத்- விஜயவாடா இடையே வரும் புத்தாண்டு முதல் ஓட தயாராக உள்ளது.
இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறி இருப்பதாவது: தற்போது இயக்கப்பட உள்ள தென்னிந்தியாவின் இரண்டாவது வந்தே பாரத் ரயில், நாட்டின் 6-வது வந்தே பாரத் ரயிலாகும். இந்த ரயில் புத்தாண்டு முதல் ஒடுவதற்கு தயாராக உள்ளது. மேலும் பிப்ரவரி மாதத்திற்கு பின்னர் இந்த ரயில் விசாகப்பட்டனம் வரையில் நீட்டிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக விஜயவாடா விசாகப்பட்டனம் இடையே இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விரைவில் ஆய்வு நடத்தப்படும். வரும் 2023 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள்ளாக நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் 75 வந்தே பாரத் ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.
முன்னதாக மஹாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில் இருந்து குஜராத் மாநில தலைநகர் காந்தி நகருக்கு வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவை, கடந்த செப்., 30ல் பிரதமர் நரேந்திர மோடியால் துவக்கி வைக்கப்பட்டது. ரயில் சேவை துவக்கப்பட்ட இரு மாதங்களில், நான்கு முறை மாடுகள் மீது மோதி ரயிலின் முகப்பு சேதம் அடைந்தது.
மும்பை - காந்தி நகர் இடையே உள்ள 620 கி.மீ., துாரத்துக்கும், 264 கோடி செலவில் தடுப்பு வேலி அமைக்க 'டெண்டர்' கோரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வாசகர் கருத்து (6)
Thamizhnaattil thayaarikkapadum rail thamizhnaattukku kidaiyaathaa. Thamizhan ilichavaayan.
எருமை பத்தரம்
they should run this train to Chennai and not Vizag
விஜயவாடா நிடதவோலு.. விசாகப்பட்டினம் மின்மயமாக்கப்பட்ட இரு வழிப்பாதை.. நேரடியாக விசாகப்பட்டினம் வரை இயக்கலாம். அடுத்த ரயில் சேட்டன்களுக்கு ஒதுக்க வேண்டும். திருவனந்தபுரம் கோழிக்கோடு திருவனந்தபுரம் மார்க்கத்தில் இல்லையென்றால் தென்னக ரயில்வேயால் புறக்கணிக்கப்படுகிறோம் என்று கூப்பாடு போடுவார்கள்...
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
தமிழ்நாட்டுக்கு ஒதுக்க படும் ரயில் பிற மாநிலத்துக்கு பயன் படுது. ஆனால் வேறு மாநிலத்திற்கு ஒதுக்கப்படும் ரயில் முழுக்க முழுக்க அவனுங்க இன மக்கள் மட்டும் பயன்படுத்த திட்டம் தீட்டி செயல்படும் ரயில்வே