டில்லி மாநகராட்சி தேர்தல் மக்கள் புறக்கணிப்பு: 2024-ல் எதிரொலிக்குமா

டில்லி மாநகராட்சிக்கான தேர்தல் இன்று (4 ம் தேதி) நடைபெற்றது. மாநகராட்சியில் 1.45 கோடிவாக்காளர்கள் உள்ளனர். இதில் 78.93 லட்சம் ஆண்கள், 66.10 லட்சம் பெண்கள் 1,061 மூன்றாம் பாலினத்தவர் 229 பேர் 100 வயதை கடந்தவர்கள் 2.04 லட்சம் பேர் 80 வயதுக்கு மேற்பட்டடவர்கள் என வாக்களிக்க தாயாராகினர். மொத்தம் உள்ள 250 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் பாதிக்கு பாதியாக 50 சதவீதம் அளவிலான இடம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மாலை 5 மணி நிலவரப்படி 50 சதவீதம் அளவிற்கு வாக்குகள் பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக கடந்த 2017 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது 53 சதவீத வாக்குகள் பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே வடமேற்கு டில்லி பகுதியை சேர்ந்த கதேவோரா பகுதி வாழ் மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். இப்பகுதிகளில்சாலை வசதிகள் , கழிவு நீர் வசதி, விளக்குகள் அமைப்பது போன்ற அடிப்படை வசதிகளை கூட அரசு செய்து தரவில்லை என குற்றம் சாட்டினர். மேலும் அடிப்படை வசதிகள் குறித்து அரசு அக்கறை கொள்ளவில்லை என்பதால் தேர்தலை புறக்கணித்தனர்
டில்லி மாநகராட்சி வடக்கு தெற்கு கிழக்கு என மூன்று பிரிவாக இருந்த நிலையில் தற்போது ஒன்றாக இணைக்கப்பட்டு தேர்தல் நடைபெறுகிறது. வரும் 7 ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன. கடந்த தேர்தல்கள் அனைத்திலும் பா.ஜ., வெற்றி பெற்று வந்துள்ள நிலையில் மீண்டும் டில்லி மாநகராட்சியை கைப்பற்றும் முனைப்பில் பா.ஜ., உள்ளது. அதே நேரத்தில் ஆம் ஆத்மியும் மாநகராட்சியை கைப்பற்றி புது கணக்கை துவங்க முனைப்பு காட்டி வருகிறது.
இதனிடையே கதேவோரா பகுதி மக்கள் தேர்தலை முழுமையாக புறக்கணித்துள்ளதால் வரும் 2024 ம் ஆண்டு நடைபெற உள்ள பொது தேர்தலில் கட்சிகளின் வெற்றி தோல்வி எதிரொலிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
வாசகர் கருத்து (6)
ஏராள ரோஹிங்யா ஆட்களுக்கு🤥 புகலிடம் அதுதான். பின்னர் எப்படி வெளங்கும் ?
உங்கள் கூற்றை முழுவதுமாக ஆமோதிக்குறேன் என்று பொருள்
வடக்கு மற்றும் வடமேற்கு தில்லியில் அதிகம் வசிப்பவர்கள் இஸ்லாமியர்களே ......
இதற்கு காரணமே தேசிய எண்ணம் இல்லாத கேசரி போன்றவர்கள் தான். தனது சுயலாபத்திற்காக மக்களுக்கு முடியாத இலவசங்களை கொடுத்து, மாநகராட்சிகளை நடக்க விடாமல் செய்தது தான். இவரது வோட்டு வேட்டை எப்போதும் அங்கீகாரம் இல்லாத பகுதிகளில் வாழ்பவர்கள் மற்றும் இஸ்லாமிய வோட்டு வங்கிகள் சார்ந்து தான் இருக்கும். இந்தியாவின் தலை நகராக விட்ட பின், ஒரு மாநிலத்திற்கு இரு அமைப்புகள் கட்டுப்படுத்த கூடாது. ஒன்று தலை நகர் மாறவேண்டும் அல்லது டெல்லியின் மாநில அந்ந்தஸ்து எடுக்கப்படவேண்டும். நாட்டை வளர்ச்சிக்கு கொண்டு போகும் மோடி ஒருபுறம், சீரழிக்கும் கேசரி போன்ற நச்சு அரசியல் தலைகள் ஒருபுறம். விளங்கிடும்.
சென்னை மாநகராட்சி தேர்தலில் பணத்துக்கு சோரம் போகும் வாக்காளர்கள் அதிகம் இருப்பதால் இங்கே அதுமாதிரி செய்ய மாட்டார்கள் மிகவும் விவரமான மேயரை தேர்ந்தெடுத்த புத்திசாலிகள் அவர்கள்