ADVERTISEMENT
காலம் தவறிய ஆயுள் காப்பீடு பாலிசி தொடர்பான மோசடி தொலைபேசி அழைப்புகள் அதிகரித்து வருவதால், பாலிசிதாரர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வல்லுனர்கள் வலியுறுத்துகின்றனர்.
ஆயுள் காப்பீடு பாலிசிகள் உரிய காலத்தில் பிரிமியம் செலுத்தப்படாவிட்டால், பாலிசிகள் செயலிழந்ததாக கருதப்படும்.
இத்தகைய பாலிசிகளை நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் பட்சத்தில் புதுப்பித்துக்கொள்ள முடியும். இடைப்பட்ட காலத்திற்கான பிரிமியம் தொகையை செலுத்த வேண்டும்.
இந்நிலையில், காலம் தவறிய பாலிசியை புதுப்பிப்பது தொடர்பாக தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மோசடியில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது.
பாலிசி காலாவதியானதாக கூறி, அதை புதுப்பிக்க அல்லது புதிய பாலிசி எடுத்து பழைய பாலிசி தொகையை பெற கட்டணம் செலுத்த வேண்டும் எனக்கூறி ஏமாற்ற முயற்சித்து வருகின்றனர்.
இத்தகைய ஏமாற்று தொலைபேசி அழைப்புகள் தொடர்பாக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
பாலிசி செயல்பாட்டில் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் மற்றும் பாலிசி செயலிழந்திருந்தால், மூன்றாம் தரப்பு நபர்களை நம்பாமல் காப்பீடு நிறுவனத்தை நேரடியாக அணுக வேண்டும் என்றும் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!