Load Image
Advertisement

அடுத்த 5 நாட்கள் பங்குச்சந்தையை இயக்கப் போகும் முக்கிய காரணிகள்!

Tamil News
ADVERTISEMENT
இந்தியப் பங்குச்சந்தைகள் இதுவரை இல்லாத வரலாற்று உச்சத்தில் இருப்பதால், அடுத்த என்ன ஆகும் என்ற கேள்வி முதலீட்டாளர்கள் அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. நிப்டி 19,000 தொடும் என சிலர் கூறுகின்றனர். இல்லை வீழ்ச்சி காத்திருக்கிறது என மற்றொரு பிரிவினர் கூறுகின்றனர். வரும் திங்கள் முதல் வெள்ளி வரை பங்குச்சந்தையை இயக்க உள்ள முக்கிய காரணிகள் குறித்து பார்ப்போம்.

ஆர்.பி.ஐ., அறிவிக்க உள்ள வட்டி விகிதம்Latest Tamil News
டிசம்பர் 5-7 தேதிகளில் ஆர்.பி.ஐ.,யின் நிதிக் கொள்கை குழு கூட்டம் நடக்க உள்ளது. நுகர்வோர் பணவீக்க குறியீடு ஆர்.பி.ஐ., உச்சவரம்பான 6% மேல் உள்ளது. இதனால் வட்டி விகித உயர்வு இருக்கும் என்கின்றனர். அதே சமயம் எண்ணெய் உள்ளிட்ட கமாடிட்டி பொருட்களின் விலை குறைந்திருப்பதால் வட்டி விகிதம் முன்பைப் போல் 50 அடிப்படைப் புள்ளிகள் உயர்த்தப்படாது. 25 - 35 அடிப்படைப் புள்ளிகள் உயர்வு இருக்கும் என்கின்றனர்.

உள்நாட்டு பொருளாதார தகவல்Latest Tamil News

ஆர்.பி.ஐ., வட்டி விகித முடிவுக்கு அடுத்தப்படியாக பங்குச்சந்தையில் இருப்பவர்கள் ஆர்வமாக கவனிப்பது நவம்பர் மாதத்திற்கான சேவைத் துறை பர்ச்சேசிங் மேனேஜர்ஸ் குறியீடு (PMI). இது கூட்டு பர்ச்சேசிங் மேனேஜர்ஸ் குறியீட்டுடன் திங்களன்று வெளியிடப்படும்.


அக்டோபர் மாதத்தில் எஸ்&பி குளோபல் சர்வீசஸ் பி.எம்.ஐ., 55.1 ஆக இருந்தது. இது செப்டம்பரில் 6 மாத காலத்தில் இல்லாத சரிவைச் சந்தித்திருந்தது. பின்னர் 3வது நிதியாண்டு தொடக்கத்தில், புதிய தொழில்கள் மற்றும் உற்பத்தியில் சேவைகளுக்கான சாதகமான தேவை தொடர்ந்து அதிகரித்தது.


மேலும், டிசம்பர் 2 உடன் முடிவடைந்த வாரத்திற்கான அந்நியச் செலாவணி கையிருப்பு பற்றிய தகவல்களும் இந்த வார வெள்ளிக்கிழமை அன்று வெளியிடப்படும்.

உலக மேக்ரோ பொருளாதார தகவல்Latest Tamil News வரும் திங்கள் முதல் வெள்ளி வரை உலக பெரும் பொருளாதாரங்களான அமெரிக்கா, யூரோ, ஜப்பான், சீனா ஆகியவற்றின் தகவல்கள் வெளியாகின்றன. அனைத்து நாடுகளின் அக்டோபர் மாத தொழிற்சாலை ஆர்டர்கள், நவம்பர் மாத வாகன விற்பனை, சேவைத் துறை மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய பி.எம்.ஐ., ஆகிய புள்ளிவிவரங்கள் திங்களன்று வெளியாகின்றன. அமெரிக்காவின் வர்த்தக இருப்பு பற்றிய தகவல் செவ்வாயன்றும், உற்பத்தியாளர் பணவீக்கம் தகவல் வெள்ளியன்றும் வெளியாகிறது. சீனாவின் நவம்பர் பணவீக்க தகவல்களும் வெள்ளியன்று வெளியாகிறது.

கச்சா எண்ணெய் விலைLatest Tamil News எண்ணெய் உற்பத்தி நாடுகளின் அமைப்பான ஒபெக்+ கூட்டம் இன்று (டிச., 4) நடக்கிறது. அதில் எட்டப்படும் முடிவுகளுக்கு ஏற்ப கச்சா எண்ணெய் விலை ரியாக்ட் செய்யலாம். ரஷ்யா மற்றும் சவுதி அரேபியா தலைமையிலான 13 உறுப்பு நாடுகளை கொண்ட ஒபெக்+ அமைப்பு எண்ணெயை உற்பத்தி குறைப்பை அறிவிக்கலாம். அப்படி அறிவித்தால் கச்சா எண்ணெய் விலை ஏறும். இல்லையெனில் கச்சா எண்ணெய் விலை மேலும் குறையும். இது தவிர ஐரோப்பிய ஒன்றியம் டிச., 5 முதல் ரஷ்ய எண்ணெய்க்கு தடை விதிக்க ஒப்புக்கொண்டது. இது பற்றிய செய்தியும் கவனம் பெறும்.

வெளிநாட்டு முதலீடுகள்Latest Tamil News வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எவ்வளவு பணத்தை பாய்ச்சுகிறார்கள் என்ற தகவல் வரும் வாரங்களில் சந்தை சென்டிமென்ட்டை இயக்கும். வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த வாரம் மட்டும் 15,000 கோடி ரூபாய்க்கு பங்குகளில் முதலீடு செய்துள்ளனர். நீண்ட காலத்திற்கு பின்னர் ஒரே வாரத்தில் இவ்வளவு அதிக தொகையை நுழைத்துள்ளனர். நவம்பர் முழுவதும் ரூ.22,500 கோடிக்கு வாங்கியுள்ளனர். ஆனால் டாலர் குறியீட்டைப் பொறுத்து ஒருவித ஏற்ற இறக்கம் இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

டாலர் குறியீட்டெண் மேலே நகரும் போது, அவர்கள் விற்றுவிடுவார்கள். டாலர் குறியீட்டெண் குறையும் போது, அவர்கள் வாங்குவார்கள்.

news promo

அனைத்து வசதிகள் கொண்ட உலகளாவிய சந்தையில் சொந்த கடை 50 லட்சம் முதல்!வாசகர் கருத்து (2)

  • RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ

    இன்னும் கூடப் பல காரணிகள் உள்ளன .... உலக அரசியல், உள்நாட்டு அரசியல், ஜி டி பி .....

  • ஆரூர் ரங் -

    ஹிமாச்சல், குஜராத்தின் தேர்தல் முடிவுகள் 1000 புள்ளிகள் வரை மாற்றும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

ஸ்ரீபெரும்புதூரில் சொந்த மனை வாங்க சரியான நேரம் வந்தாச்சு!

Advertisement
 
Advertisement