ADVERTISEMENT
கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்து நலத்திட்டங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என அனைத்து அதிகாரிகளுக்கும் கலெக்டர் அறிவுறுத்தினார்.
கள்ளக்குறிச்சியில், அனைத்து நாடுகள் மாற்றுத் திறனாளிகள் தின விழா நடந்தது. கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கி, பேசியதாவது:
மாவட்டம் முழுதும் மாற்றுத் திறனாளிகளின் இடத்திற்கே சென்று, தேவையான சிகிச்சைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படும்.
அதிகாரிகள், அனைத்து திட்டங்களையும் மாற்றுத் திறனாளிகளிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
மாவட்ட முன்னோடி வங்கிகளின் சார்பாக அதிகளவில் கடனுதவி வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் அனைத்து நாட்களில் பணியும், பணிக்கான முழு ஊதியமும் வழங்க வேண்டும்.
மாவட்டத்தில், கடந்தாண்டு, மாற்றுத் திறனாளிகளுக்கு மாநிலத்திலேயே அதிகமான அளவில் 195 பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டது. 260 ஆண்ட்ராய்ட் போன் வழங்கப்பட்டது.
தண்டு வடம் பாதித்தவர்களுக்கான நியூமோஷன் வீல் சேர் வழங்கியதிலும் முதன்மை பெற்றுள்ளோம். அனைத்து திங்கட்கிழமைகளிலும் வழங்கப்படும் அரசு நலத்திட்ட உதவிகளையும் மாற்றுத் திறனாளிகள் பெற்று பயனடைய வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
கூட்டத்தில், செந்தில்குமார் எம்.எல்.ஏ., மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலர் சுப்ரமணி, சி.இ.ஓ., சரஸ்வதி, மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அலுவலர் முரளிதரன், டாக்டர்கள் நவநீதன், கமலசேகர், மோகன்ராஜ், பிரவீனா, வேல் இசைக்கோ, கணேஷ்ராஜா, வாசவி உட்பட பலர் பங்கேற்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!