ADVERTISEMENT
மதுரை: மதுரை நகரில் விதிமீறிய வாகன நம்பர் பிளேட் உடன் பயணித்த 1050 பேருக்கு மொத்தம் ரூ.7 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் நேற்றுமுன்தினம் வழக்கு ஒன்றை விசாரித்த நீதிபதிகள்,இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் நம்பர் பிளேட்டுகளில் அரசு விதிமுறைபடி அந்த வண்டியின் நம்பர் மட்டுமே இடம்பெற வேண்டும். வேறு எந்த வகையிலும் எழுத்தோ தலைவர்கள், நடிகர்களின் படமோ இடம் பெறக் கூடாது.
தினமும் போலீசாரும், போக்குவரத்து ஆய்வாளர்களும்வாகன சோதனை நடத்திவிதிமீறிய நம்பர் பிளேட்டுகளை அகற்ற வேண்டும். அதிகபட்ச அபராதம் விதிக்க வேண்டும். இதை உடனடியாக நடைமுறைபடுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.
நேற்று போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவுபடி, போக்குவரத்து துணைகமிஷனர் ஆறுமுகசாமி தலைமையில் கூடுதல் துணைகமிஷனர் திருமலைக்குமார், உதவிகமிஷனர் மாரியப்பன், இன்ஸ்பெக்டர்கள் தங்கமணி, சுரேஷ், தங்கபாண்டி, பஞ்சவர்ணம் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். விதிமீறிய நம்பர் பிளேட்களுடன் வந்த 1050 பேருக்கு ரூ.7 லட்சம் அபராதம் விதித்தனர். உடனடியாக நம்பர் பிளேட்டுகளை மாற்றவும் அறிவுறுத்தினர்.
திருட்டு வண்டி சிக்கியது
மூன்றுமாவடியில் இன்ஸ்பெக்டர் சுரேஷ், எஸ்.ஐ.,க்கள் அய்யனார், அழகர்சாமி, போலீசார் அருண், ரமேஷ் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது டூவீலரை விட்டுவிட்டு இளைஞர் ஒருவர் ஓட்டம் பிடித்தார். பதிவெண்ணை சோதனையிட்டபோது அது போலியானது எனத்தெரிந்தது. அந்த டூவீலர் சென்னை திருவான்மியூரில் ஒருமாதத்திற்கு முன் திருடப்பட்டுள்ளது. பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடிய நிலையில் மதுரையில் மீட்கப்பட்டுள்ளது. தப்பி ஓடிய நபரை புதுார் போலீசார் தேடி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
இந்த சட்டம் திமுக அடிமைகளுக்கு பொறுந்தாதுதானுங்களே?