ADVERTISEMENT
சென்னை : மின் இணைப்பு எண்ணுடன், நேற்று வரை, 51 லட்சம் பேர், 'ஆதார்' எண்ணை இணைத்துள்ள நிலையில், அந்த பணிக்காக, மின் வாரியம் கூடுதலாக, தனி இணையதள முகவரியை வெளியிட்டு உள்ளது.
தமிழக மின் வாரியம், வீடுகளை உள்ளடக்கிய இலவச மற்றும் மானிய விலை மின்சாரம் வழங்கும் நுகர்வோரின் மின் இணைப்பு எண்ணுடன், அவர்களின் ஆதார் எண்ணை இணைத்து வருகிறது.
மின் வாரியத்தின், www.tangedco.gov.in என்ற இணையதளத்திலும், கட்டண மையங்களிலும், ஆதார் எண்ணை இணைக்கலாம்

இதனுடன், பலரும் இணையதளத்தில் மின் கட்டணம் செலுத்துவதுடன், புதிய மின் இணைப்பு, மின் இணைப்புபெயர் மாற்றம் போன்ற சேவைகளுக்கும் விண்ணப்பித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆதார் எண்ணை இணைக்க மட்டும், https://adhar.tnebltd.org/Aadhaar/ என்ற இணையதள முகவரியை, மின் வாரியம் நேற்று வெளியிட்டது.
மொத்தம், 2.68 கோடி மின் நுகர்வோரில் நேற்று மாலை வரை, 51 லட்சம் பேர் மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைத்து உள்ளனர்.
வாசகர் கருத்து (6)
NRI Holder Houses How Possible to upload link to Tneb Pl Guide .
வாக்காளர் அட்டைகளையும் ஆதாரோட இணைத்தால் இன்னமும் நல்லது ..
விஞ்ஞானரீதியான திருடர் குல திலக தீயமுகவின் ஆட்சியில் அந்த லிங்கை தொட்டவுடன் நமது வங்கி கணக்குகளையும் நமது பெர்சனல் விசயங்களையும் ஆட்டய போட்டு பணத்தை ஆட்டய போட போகிறார்கள்
ஆதார் இணைக்கப்பட்ட தின் நிலை அறிய வசதி செய்தால் நன்று
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
ஐடி யில் இருந்து திமுகவை Delink செய்ய தயாராகி வருகிறார்கள்.