Load Image
Advertisement

மதுபான கொள்கை விவகாரம்: புகார் மனு நகல் கேட்டு கவிதா சி.பி.ஐ.க்கு கடிதம்

Tamil News
ADVERTISEMENT
ஹைதராபாத்: எனக்கெதிராக கொடுத்த புகார் மனு நகலை அனுப்பி வைக்குமாறு சி.பி.ஐ.,க்கு கவிதா கடிதம் எழுதியுள்ளார்.

புதுடில்லி மதுபான கொள்கையில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கில் டிச.06-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கு, சி.பி.ஐ., 'சம்மன்' அனுப்பியுள்ளது.

Latest Tamil News
இதில் நடந்த ஊழல் தொடர்பாக சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் கவிதாவுக்கும் தொடர்பு உள்ளதாக சமீபத்தில் அமலாக்கத் துறை குற்றம் சாட்டியது. மதுபான கொள்கை முறைகேட்டில் கைது செய்யப்பட்ட தொழில் அதிபர் அமித் அரோராவுடன், கவிதா பலமுறை தொடர்பு கொண்டு பேசியதாக அமலாக்கத் துறை தரப்பில் கூறப்பட்டது.

இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி சி.பி.ஐ., கவிதாவிற்கு நேற்று சம்மன் அனுப்பி டிச.06-ல் ஆஜராக உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இன்று சி.பி.ஐ.க்கு கடிதம் கவிதா எழுதியுள்ளார் அதில், மதுபான கொள்கை விவகாரத்தில் சட்ட விரோத பணி பரிமாற்றத்தில் எனக்கெதிராக கொடுத்த புகார் மனுவின் நகலை அனுப்பி வைத்தால் டிச.06 ல் ஆஜராக தயார் என கூறியுள்ளார்.
news promo

அனைத்து வசதிகள் கொண்ட உலகளாவிய சந்தையில் சொந்த கடை 50 லட்சம் முதல்!



வாசகர் கருத்து (3)

  • cbonf - doha,கத்தார்

    அவருடைய கட்சியிலேயே ஒருவர் "பெயரில்லா (anonymous ) புகார் மனு" CBI க்கு கொடுத்துள்ளார் புகார் மனு CBI க்கு கொடுத்தது யார் என தெரிந்து கொள்ள இப்படிப்பட்ட நிபந்தனை. புகார் மனு நகலை தராவிட்டால் நான் விசாரணைக்கு வரமாட்டேன் என்று சொல்லுவார். அப்படி சொல்ல அவருக்கு சட்டப்படி உரிமை இருக்கிறதா இல்லையா என்பதை நீதி மன்றம் சொல்லும். அதற்க்கு ஒரு 5 - 6 வருடங்கள் பிடிக்கும்.. DELAY TACTICS

  • அப்புசாமி -

    அப்புடி என்ன ரகசியம்? அந்த புகாரை எல்லா நாளிதழ்களிலும் வெளியிடுங்க.

  • duruvasar - indraprastham,இந்தியா

    அடுத்து இரண்டு இட்லியும் கார் பட்டினியை மும் காலை 6 மணிக்குள் அனுப்பி வைத்தால் கட்டாயம் ஆஜராவேன் என கூறலாம். எல்லாம் வானத்திலிருந்து இறங்கிய தேவதைகள் என்ற நினைப்பு.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்