ADVERTISEMENT
புதுடில்லி:ஸ்மார்ட் டிவி'களின் விற்பனை, கடந்த செப்டம்பர் காலாண்டில், 38 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளதாக, 'கவுன்டர்பாயின்ட்' ஆராய்ச்சி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
நடப்பு நிதியாண்டில், ஜூலை - செப்டம்பர் காலாண்டில், ஸ்மார்ட் டிவிகளின் விற்பனை, 38 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது.
பண்டிகை காலம், புதிய அறிமுகங்கள், தள்ளுபடி நிகழ்வுகள், விளம்பரங்கள் ஆகியவை காரணமாக, செப்டம்பர் காலாண்டில் விற்பனை அதிகரித்து உள்ளது.
இந்திய சந்தையில், உலகளாவிய பிராண்டுகளின் பங்களிப்பு 40 சதவீதமாக உள்ளது.
இதற்கடுத்து, சீன பிராண்டுகள் 38 சதவீத பங்களிப்புடன் உள்ளன.
இந்திய தயாரிப்புகள், கிட்டத்தட்ட இருமடங்கு வேகமான வளர்ச்சி கண்டு, 22 சதவீதமாக அதிகரித்து உள்ளது.
இக்காலாண்டில், சிறிய அளவிலான டிவிகளின் விற்பனை அதிகரித்துள்ளது. 32 அங்குலத்திலிருந்து 42 அங்குலம் வரையிலான அளவு கொண்ட டிவிகள், மொத்த விற்பனையில் பாதியாகும்.
மின்னணு வர்த்தக தளங்கள் வாயிலாக, கிட்டத்தட்ட 35 சதவீத டிவிகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன.
பிராண்டுகளைப் பொறுத்தவரை, 'ஷாவ்மி' 11 சதவீத பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது.
'சாம்சங்' 10 சதவீத பங்களிப்புடனும்; எல்.ஜி., 9 சதவீத பங்களிப்புடனும் உள்ளன.
வேகமாக வளரும் பிராண்டுகள் வரிசையில், 'வி.யு., டி.சி.எல்., ஒன்பிளஸ்' ஆகியவை முன்னணியில் உள்ளன.
அதிகமான மாடல்களை அறிமுகம் செய்வதில், எல்.ஜி., நிறுவனம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!