ADVERTISEMENT
மும்பை:நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு, தொடர்ந்து மூன்று வாரங்களாக அதிகரித்து வருகிறது என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த நவம்பர் 25ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு 23 ஆயிரத்து, 490 கோடி ரூபாய் அதிகரித்து, 44.56 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
இதற்கு முந்தைய வாரத்தில், இருப்பு 44.33 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
கடந்த ஆண்டு அக்டோபரில், இதுவரை இல்லாத அளவுக்கு, 52.89 லட்சம் கோடி ரூபாயாக அன்னிய செலாவணி இருப்பு அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால், அதன்பின் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவைக் கண்டதை அடுத்து, அதை தடுக்கும் வகையில், அதிகளவில் டாலரை விற்பனை செய்ய வேண்டிய நிலை, ரிசர்வ் வங்கிக்கு ஏற்பட்டது.
இதையடுத்து, அன்னிய செலாவணி இருப்பும் குறையத் துவங்கியது.
இந்நிலையில், தற்போது தொடர்ந்து மூன்று வாரங்களாக இருப்பு அதிகரித்து வருகிறது.
தங்கத்தை பொறுத்தவரை, மதிப்பீட்டு வாரத்தில் இருப்பு சரிவைக் கண்டுள்ளது. 591 கோடி ரூபாய் அளவுக்கு சரிவைக் கண்டு, 3.23 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!