ADVERTISEMENT
புதுடில்லி:ரிசர்வ் வங்கியின் 'டிஜிட்டல் ரூபாய்'க்கான சோதனை முயற்சிகள், மாற்றத்துக்கான சிறந்த திட்டமாகும் என, எஸ்.பி.ஐ., தலைவர் தினேஷ் காரா கூறியுள்ளார்.
ரிசர்வ் வங்கி, சோதனை முயற்சியாக சில்லரை பரிவர்த்தனைகளுக்கான டிஜிட்டல் ரூபாயை மும்பை, புதுடில்லி, பெங்களூரு, புவனேஸ்வர் ஆகிய நான்கு நகரங்களில் அறிமுகம் செய்துள்ளது.
துவக்கத்தில், குறிப்பிட்ட வாடிக்கையாளர்கள் மட்டுமே இதை பயன்படுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இது குறித்து, எஸ்.பி.ஐ., தலைவர் தினேஷ் காரா மேலும் கூறிஉள்ளதாவது:
ரிசர்வ் வங்கியின் சில்லரை பரிவர்த்தனைகளுக்கான டிஜிட்டல் ரூபாய் சோதனை முயற்சிகள், ஒரு பெரும் மாற்றத்துக்கான திட்டமாகும். இது மிகவும் குறைந்த செலவில், சிறந்த பணப் பரிமாற்றத்தை உறுதி செய்யும்.
டிஜிட்டல் ரூபாய், தற்போது நடைமுறையில் உள்ள நாணய கட்டமைப்பு முறையுடன் இசைந்து போவதாகவும்; மேலும் பல புதுமைகளை படைக்கும் விதமாகவும் அமைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
சில்லரை பிரிவில், டிஜிட்டல் ரூபாய், இரண்டாவது கட்டமாக, மேலும் ஒன்பது நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!