Load Image
Advertisement

திறந்த வெளியில் உணவு பொருட்கள் விற்பனை கண்டுக்காத உணவு பாதுகாப்பு துறை

Tamil News
ADVERTISEMENT


திண்டுக்கல்,-திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் பகுதி ரோட்டோர கடைகளில் சுகாதார மில்லாமல் திறந்த வெளியில் உணவு பொருட்களை விற்பதால் பலரும் வயிற்றுப்போக்கு,வாந்தி உள்ளிட்ட பிரச்னைகளில் சிக்கி அவதிப்படுகின்றனர்.

திண்டுக்கல் பஸ்ஸ்டாண்ட் பகுதியில் டீ கடை, ஓட்டல்கள், மிட்டாய் கடை உள்ளிட்ட கடைகளில் விற்கப்படும் சம்சா, பஜ்ஜி, முறுக்கு, வடை போன்ற உணவு பொருட்களை சுகாதாமில்லாமல் திறந்த வெளியில் வைத்து விற்கின்றனர்.

இதில் ஈ,கொசு,வண்டுகள் உட்கார அதை அறியாமல் வாங்கி உண்ணும் வாடிக்கையாளர்களுக்கு அஜீரணம், வயிற்றுப்போக்கு, வாந்தி பிரச்னைகள் ஏற்படுகிறது.

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிந்தும் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.

அது மட்டுமில்லாமல் இக்கடைகள் ரோட்டோரங்களில் இருப்பதால் அவ்வழியாக செல்லும் வாகனங்களிலிருந்து வெளிவரும் கரும்புகைகள், ரோட்டோர துாசிகள் திறந்த வெளி உணவு பொருட்களில் படிகிறது.வாங்கி உண்ணும் வாடிக்கையாளர்களும் பெரும் பிரச்னைகளை சந்திக்கின்றனர்.

உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

சிவராமபாண்டியன், உணவு பாதுகாப்புதுறை மாவட்ட நியமன அலுவலர், திண்டுக்கல்: ஆய்வுகள் நடத்தி இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,என்றார்.
news promo

அனைத்து வசதிகள் கொண்ட உலகளாவிய சந்தையில் சொந்த கடை 50 லட்சம் முதல்!



வாசகர் கருத்து (2)

  • Murugesan Sivananithaperumal -

    உணவு பாதுகாப்பு துறை என்று ஒன்று தமிழ் நாட்டில் இருக்கிறதா...அப்படி இருந்தால் அங்கு வேலை செய்பவர்கள் மனசாட்சி இல்லாதவர்கள் என்றே நான் நினைக்கிறேன்

  • அப்புசாமி -

    எல்லோரும் ஆரோக்கியமாத்தான் இருக்காங்க.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

ஸ்ரீபெரும்புதூரில் சொந்த மனை வாங்க சரியான நேரம் வந்தாச்சு!

Advertisement
 
Advertisement