Load Image
Advertisement

கலெக்டர் அலுவலகம் பொலிவு பெற்றதா

Tamil News
ADVERTISEMENT
மதுரை -நுாறாண்டுகளை கடந்த நிலையில் கலெக்டர் அலுவலகத்தில் இடம் போதாமையால், புதிய கட்டடம் 'லிப்ட்' உட்பட நவீன வசதிகளுடன் ரூ.33 கோடியில் கட்டடப்பட்டு 2 ஆண்டுகளுக்கு முன் திறந்தனர். இருப்பினும் இந்த கட்டடத்திற்குள் பழைய கட்டடத்தில் இயங்கிய பல அலுவலகங்கள் கொண்டு வரப்படவில்லை. ஏனெனில் பிற மாவட்டங்களைப் போல ஒரே வளாகத்திற்குள் அனைத்து துறைகளின் தலைமை அலுவலகமும் வரும் வகையில் திட்டமிட்டு கட்டப்படவில்லை.

இதனால் சத்துணவு அலுவலகம், மாவட்ட, சார்நிலை கருவூல அலுவலகங்கள், பதிவு வைப்பறை, செஞ்சிலுவை சங்கம், மதுரை வடக்கு தாலுகாவின் பொது வினியோக அலுவலகம் உள்ளிட்டவை இன்றுவரை இடம்பெயராமல் பழைய கட்டடத்திலேயே உள்ளன.

அதேபோல பழைய ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆவண காப்பகம், பட்டுவளர்ச்சித் துறை, கள்ளர் சீரமைப்புத்துறை, முத்திரைத்தாள், விமானநிலைய விரிவாக்க நில எடுப்பு தாசில்தார் அலுவலகங்கள், மாவட்ட பஞ்சாயத்து, ஆய்வுக்குழு அலுவலகம் போன்றவையும் பழைய கட்டடங்களிலேயே இயங்கி வருகின்றன. இதனால் மக்கள் அங்குமிங்குமாய் அலைகின்றனர்.

வெளியில் இயங்கும் அலுவலகங்கள்



தவிர மதுரை நகரின் பிற பகுதிகளிலும் கலெக்டர் அலுவலகத்திலேயே இயங்க வேண்டிய நகர்ப்புற நிலவரி உதவி ஆணையர், 4 வழிசாலை நில எடுப்பு தாசில்தார் அலுவலகம், ஆதிதிராவிடர் நிலஎடுப்பு அலுவலகம் உள்ளிட்ட பலவும் வாடகை கட்டடங்களில் இயங்கி வருகின்றன.

பிற மாவட்டங்களில் எஸ்.பி., அலுவலகம், ஆர்.டி.ஓ., என எல்லா துறையின் அலுவலகங்களும் கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே செயல்படுகின்றன. அதுபோன்ற வசதி மதுரை கலெக்டர் அலுவலகத்தில் இல்லை. குறிப்பாக நிலஅளவை உதவி இயக்குனர் அலுவலகம் புதிய கட்டடத்திற்குள் வந்தாலும், அதற்கான ஆவணங்கள் வைப்பது பழைய ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கட்டடத்தில்தான் உள்ளது. இதனால் கலெக்டர் அலுவலக பணிக்காக வருவோர் பல்வேறு இடங்களுக்கும் அலைந்து திரியும் நிலைதான் உள்ளது.

புதிய கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டதும், பிரிட்டிஷ் கால கட்டடத்தை புனரமைக்கும் பணி ரூ.2.16 கோடி மதிப்பில் பல மாதங்களாக ஆமை வேகத்தில் நடக்கிறது. இதனை புனரமைத்து அரசு மியூசியமாக மாற்ற உள்ளதாக தெரிவித்தனர். தவிர, வேறு பகுதிகளில் இயங்கி வரும் பல அரசு துறை அலுவலகங்களை இக்கட்டடத்திற்கு கொண்டு வரலாமா எனவும் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

வடக்கு, தெற்கு தாலுகாக்கள்



கலெக்டர் அலுவலக வளாகத்தில் மதுரை வடக்கு, தெற்கு என இரு தாலுகா அலுவலகங்கள் உள்ளன. வைகை ஆற்றின் தென்பகுதியை சேர்ந்த தெற்கு தாலுகா அலுவலகத்தை அவனியாபுரம், மதுரை கிழக்கு பிர்கா பகுதியில் அமைக்கலாம். அதேபோல வடக்கு தாலுகாவை அழகர்கோவில் ரோடு பகுதியில் செயல்பட வைக்கலாம். இவை இடத்தை காலி செய்தால் கலெக்டர் அலுவலகத்தில் அதிக இடம் கிடைக்கும்.

தற்போது புனரமைக்கும் பிரிட்டிஷ்கால கல் கட்டடத்தையொட்டி வடபகுதியில் உள்ள கட்டடங்கள் பிற்காலத்தில் கட்டப்பட்டவை. அவையும் மழைக்கு ஒழுகும் தன்மையுடன், பழுதுபட்ட நிலையில் உள்ளது. அவற்றை புனரமைக்க வேண்டும்.

கலெக்டர் அலுவலகத்தில் காந்தி மியூசியம் பகுதியை அடுத்துள்ள கேட், பாதுகாப்பு காரணத்திற்காக பூட்டப்பட்டு கிடக்கிறது. இதனால் இப்பகுதி திறந்தவெளி கழிப்பிடமாகவும், திறந்தவெளி 'பார்' ஆக பயன்படுத்தும் நிலையும் உள்ளது. இதை தவிர்க்க இந்த கேட்டை திறந்து, இப்பகுதியில் மண்டிக்கிடக்கும் புதர், காயலான் கடைக்கு கூட தகுதியில்லாத வாகனங்களை அப்புறப்படுத்தி சரிசெய்ய வேண்டும். இதுபோன்ற சீரமைப்புகளை மேற்கொண்டால் கலெக்டர் அலுவலகம் பொலிவு பெறும். இந்த வளாகத்தில் கூடுதல் இடவசதியும் கிடைக்கும். வருங்கால தேவைகளுக்கு பயன்படுத்த வேறு இடங்களை தேடும் அவசியம் வராது.

மதுரை கலெக்டர் அலுவலகம் 1916ல்பிரிட்டிஷ் ஆட்சியில் கட்டப்பட்டது.நுாறாண்டுகளை கடந்து கம்பீரமாக காட்சியளிக்கிறது. 15 ஏக்கருக்கும் மேல்உள்ள இந்த அலுவலகத்தில் பழைய ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகமும் 1986 மாவட்ட பிரிவினை வரை செயல்பட்டது. அந்த கலெக்டரின் முகாம் அலுவலகமாக தாமரைத்தொட்டி அருகே பாஸ்போர்ட் அலுவலகம் இயங்கிய கட்டடம் இருந்துள்ளது. ரூ.33 கோடியில் புதிய கட்டடம்



news promo

அனைத்து வசதிகள் கொண்ட உலகளாவிய சந்தையில் சொந்த கடை 50 லட்சம் முதல்!



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

ஸ்ரீபெரும்புதூரில் சொந்த மனை வாங்க சரியான நேரம் வந்தாச்சு!

Advertisement
 
Advertisement